For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் தலைவராகி விட்டார்.. ராஜா சார் நீங்க எப்ப????

மு.க.ஸ்டாலின் திமுக தலைவராவாரா என்று கிண்டலடித்து வந்தவர் எச். ராஜா. இப்போது ஸ்டாலின் தலைவராகி விட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை : ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானபோது மு.க.ஸ்டாலின் தலைவராவது எப்போது என்று கிண்டலடித்திருந்தார் எச். ராஜா. இப்போது ஸ்டாலின் தலைவராகி எச். ராஜா வாயை அடைத்து விட்டார்.

எச் ராஜா மற்றவர்களை கலாய்ப்பதை ஒரு சைட் தொழிலாகவே வைத்துள்ளார். காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாததால் அப்பதவியிலிருந்து விலக முடிவு செய்தார். இதையடுத்து அப்பதவிக்கு ராகுல் காந்தி வந்தால் கட்சியின் பலம் கூடும் என்று மூத்த தலைவர்கள் விரும்பினர்.

இதையடுத்து காங்கிரஸ் பொதுக் குழுவில் தேர்தல் நடத்தப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது எச் ராஜா ஸ்டாலினை நக்கலடித்து டுவீட் வெளியிட்டிருந்தார்.

ஸ்டாலின் எப்போது

எச்.ராஜா தனது டுவிட்டில் கூறுகையில், எப்படியோ ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆகிவிட்டார். நண்பர் ஸ்டாலின் தி.மு.க தலைவர் ஆவது எப்போது என்றுதான் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஸ்டாலினை வம்புக்கிழுத்த ராஜாவை பலரும் கண்டித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபிறகு அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அப்பதவிக்கு இன்று தேர்தல் நடத்துவதாக கூறப்பட்டது. எனினும் அப்பதவிக்கு ஸ்டாலின் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாயை அடைத்த ஸ்டாலின்

வாயை அடைத்த ஸ்டாலின்

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியும் திமுக தலைவராக மு.க. ஸ்டாலினும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இதன் மூலம் எச். ராஜாவின் வாயை அடைத்து விட்டார் ஸ்டாலின்

பாஜக தலைவராக முடியுமா

பாஜக தலைவராக முடியுமா

ராகுல் காந்தி, ஸ்டாலினை விடுங்க. பாஜகவின் தமிழக தலைவராக எச். ராஜா வர முடியுமா.. அதற்கான சாத்தியங்கள் உள்ளனவா.. அந்த வாய்ப்பாவது எச். ராஜாவுக்குக் கிடைக்குமா.. ராஜாதான் விளக்க வேண்டும்.

English summary
Is there any chance of H Raja becoming the state president of Tamil Nadu BJP?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X