For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஷ்டப்பட்டு தனிக்கட்சி துவங்குவதற்கு பதில் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுக்கிறாரா கமல்?

ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் முகமாக நடிகர் கமல்ஹாசன் விளங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கெஜ்ரிவால்-கமல் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு-வீடியோ

    சென்னை: டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும், நடிகர் கமல்ஹாசனும் தற்போது சந்திப்பு கூட்டம் நடித்தி வரும் நிலையில் ஏராளமான ஊகங்கள் அவர்களை சுற்றி வருகின்றன.

    கடந்த லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தமிழகத்தில் வேட்பாளர்கள் களம் கண்டனர். அவர்கள் சின்னமாக துடைப்பத்தை தேர்ந்தெடுத்தனர்.

    இதற்கு காரணம் ஊழலை துடைத்தெறிவது என்றும் பிரசாரம் செய்தனர். விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்களே போட்டியிட்டாலும், அவர்களில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் எஸ்.பி. உதயகுமார் கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

     தனித்து நின்று

    தனித்து நின்று

    டெல்லியில் தனித்து நின்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சியால் தமிழகத்தில் சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் ஊழலுக்கு எதிராக நடிகர் கமல் ஹாசன் குரல் எழுப்பி வருகிறார். வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான கமலை போன்று ஊழலுக்கு எதிராக போராடியவர் கேஜ்ரிவால்.

     ஆறுதல்

    ஆறுதல்

    அன்னா ஹசாரேவுடன் போராடினார். பின்னர் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது முதல்வராக உள்ளார். தமிழக விவசாயிகள் தலைநகரில் போராட்ட்ம நடத்தி வந்த நிலையில் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தவர் கேஜ்ரிவால்.

     சென்னையில் கேஜ்ரிவால்

    சென்னையில் கேஜ்ரிவால்

    இந்நிலையில் நடிகர் கமலும் தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒன்றிணைவோம் என்று மக்களை அழைத்து வருகிறார் கமல். கிட்டதட்ட தமது கொள்கைகளுடன் ஒத்து போகும் கமல் ஹாசனை தமது கட்சியிலோ கூட்டணியிலோ இணைந்து கொள்வதற்காக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

     என்ன நடக்கும்?

    என்ன நடக்கும்?

    தமிழகத்தில் ஆம்ஆத்மிக்கென்று பிரபலமான முகம் இல்லாததால் கமலை தமிழக ஆம்ஆத்மி முகமாக செயல்பட கேஜ்ரிவால் அழைப்பு விடுக்க அதிக வாய்ப்புள்ளது. ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றை புள்ளியில் இருவரும் ஒரே கொள்கை வைத்துள்ளதால், கஷ்டப்பட்டு தனிக்கட்சி துவங்கும் பதில், ஆம் ஆத்மியில் சேரலாம் என கமலை கேஜ்ரிவால் அழைக்க வாய்ப்புள்ளது. கமலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Aam Admi Party's Organiser and Delhi CM Kejriwal met Kamalhassan in Chennai. Is this meeting will results Aam Admi's TN face?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X