For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்.. அண்ணா படைத்த சாதனையை விஞ்சிய 'தம்பி' கருணாநிதி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்..ராஜாஜி ஹால் முதல் மெரினா வரை...வீடியோ

    சென்னை: இறுதிச் சடங்கின்போது கூடிய மக்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா படைத்த சாதனையை அவரின் தம்பி கருணாநிதி விஞ்சிவிட்டார் என்கிறார்கள்.

    பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது 1969ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெற்றது. அப்போது தமிழகமெங்கும் இருந்து அலைகடலென தொண்டர் கூட்டம் ஆர்ப்பரித்து சென்னைக்கு வந்திருந்தது.

    Will Karunanidhi beat his political Guru Annadurai record?

    மொத்தம் சுமார் 15 மில்லியன் பேர் அதாவது சுமார் ஒன்றரை கோடி அளவுக்கான கூட்டம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தது என்று உலக சரித்திரத்தில் சாதனை பதிவாகியுள்ளது.

    உலகிலேயே அதிகமாக கூட்டம் கூடிய டாப் 10 நிகழ்வுகளில் ஒன்று அறிஞர் அண்ணாவின் இறுதிச்சடங்கில் கூடிய கூட்டம் என்கிறது புள்ளிவிபரம்.

    இதற்கு அடுத்தபடியாக 1989ஆம் ஆண்டு ஈரானில் Ayatollah Khomein இறுதி சடங்கின்போது கூடிய 10 மில்லியன் அதாவது சுமார் ஒரு கோடி பேர் என்பது இறுதிச் சடங்குக்கு உலக அளவில் கூடிய இரண்டாவது பெரும் கூட்டமாகும்.

    ஆனால் இன்று கருணாநிதியின் இறுதிச் சடங்கின் போது சென்னையில் கூடியுள்ள கூட்டம் அவரது அரசியல் அண்ணனான அறிஞர் அண்ணா இறுதிச் சடங்குக்கு கூடிய கூட்டத்தை தாண்டியிருக்கும் என்று கூறுகிறது, தோராயமான ஒரு புள்ளிவிவரம்.

    கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக போலீசார் தடியடி நடத்தினர். கட்டிடங்களின் மேல் தொண்டர்கள் ஏறி நின்று உள்ளே வர முயன்றனர். தொலை தூர கட்டிடங்களிலும் மேலே ஏறி மக்கள் கருணாநிதி வைத்திருக்கும் இடத்தை பார்த்தனர்.

    English summary
    Will Karunanidhi beat his political Guru Annadurai record by getting more people on his final ritual.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X