For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியா, அதிமுகவா.. அப்படீன்னா திமுகவா.. ஒருவேளை தனித்து நிற்குமா.. சிங்கிள் கேள்வி.. செம ரிசல்ட்!

ரஜினிகாந்த்துடன் பாமக கூட்டணி சேருமா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 18-02-2020 | Oneindia tamil Morning news

    சென்னை: இனி அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடரும் என்று சொல்லப்பட்டாலும், நடக்கிற சம்பவங்களும், அதையொட்டி மக்கள் மனசில் எழும் வியூகங்களும், யூகங்களும் வேற லெவலுக்கு இருக்கின்றன!

    ரஜினிகாந்துடன் பாமக இணையலாம் என்று தமிழருவி மணியன் சொன்னதில் இருந்தே, இந்த விவகாரம் இன்னும் அடங்காமல் உள்ளது.. ரஜினியுடனா? எப்படி? அப்போ அதிமுக இல்லையா? என்ற பல கேள்விகள் எழுந்தபடியே உள்ளன.

    இதனிடையே, முதல்வர் 4ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கும், தமிழக பட்ஜெட் அறிவிப்புகளுக்கும் சுடச்சுட டாக்டர ராமதாஸ் ட்வீட்களை போட்டு வாழ்த்தினாலும்கூட, ரஜினி சம்பந்தமான சூடு இன்னும் தகித்து கொண்டுதான் இருக்கிறது!

    பாஜகவின் படுபயங்கரமான சாதனை... உ.பி.-யில் 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 58% பாஜகவின் படுபயங்கரமான சாதனை... உ.பி.-யில் 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 58%

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்க்கலாம் என்றுதான் டாக்டர் ஐயா சொல்லி இருக்கிறாரே தவிர, ரஜினி எப்போது கட்சி ஆரம்பித்தாலும் சேரவே மாட்டோம் என்று உறுதியாக, தெளிவாக சொல்லவில்லை. அந்த வகையில் பார்த்தால், ஏதோ ஒரு நூலிழை தொடர்பு டாக்டருக்கும் - ரஜினிகாந்துக்கும் ஒட்டிக் கொண்டுள்ளது. அதை வைத்தே நாம் ஒரு கேள்வியை வாசகர்களிடம் நடத்தினோம்.. கேள்வி இதுதான்: "பாமக யாருடன் கூட்டணி சேர்ந்தால் சரியாக இருக்கும்?"

    கூட்டணி

    கூட்டணி

    அதற்கு "அதிமுக" என்று 18.34 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். "திமுகவுடன் கூட்டணி" என்பதற்கு 20.71 சதவீதம் பேரும், "ரஜினிகாந்த்துடன் கூட்டணி" என்பதற்கு 22.49 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "3வது அணி அமைக்கலாம்" என்ற ஆப்ஷனுக்கு 7.1 சதவீதமும், "தனித்து நிற்கலாம்" என்பதற்கு 31.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    ஆச்சரியங்கள்

    ஆச்சரியங்கள்

    இது ஒரு சாதாரண கருத்து கணிப்பு என்றாலும், ஒரேடியாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது.. ஏனெனில் மக்களின் மனங்களை ஓரளவு பிரதிபலிக்கிறது என்றுகூட எடுத்து கொள்ளலாம்... அந்த வகையில் பார்த்தால், இந்த கணிப்புகளில் நமக்கு 3 ஆச்சரியங்கள் உள்ளன. யாருடன் கூட்டணி தொடரும் என்றாரோ, அந்த அதிமுகவுக்கு 18.34 சதவீதம்தான் வாக்கு கிடைத்துள்ளது.. மாறாக, எதிர்தரப்பில் உள்ள திமுகக்கு 20.71 சதவீதம் என்று பதிவாகி உள்ளது. இதற்கு காரணம், கடந்த காலங்களில் பாமக மாறி மாறி வைத்து கொண்ட கூட்டணி வரலாறுகள்தான்!

    அதிமுக

    அதிமுக

    அதனால் எவ்வளவுதான் திமுகவை விமர்சித்து பாமக சம்பந்தமான கண்டனங்கள், அறிக்கைகள் வந்தாலும், திமுக பாமக உறவு என்பதை மக்கள் இன்னும் ஓரளவு விரும்புவது தெரிய வருகிறது. அதேபோல, இன்னும் அரசியலுக்கே வராத ரஜினியுடன் பாமக இணையலாமா என்ற கேள்விக்கு 22.49 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    ரஜினி-ராமதாஸ் இருவருமே ஒருவருக்கொருவர் ஆகாது என்ற மனநிலைதான் தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அவர்களின் கூட்டணிக்கு அதிமுக, திமுகவை விட அதிக ஆதரவு கிடைத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை இவர்கள் கூட்டணி வைத்தால், ரஜினி ரசிகர்களும் - பாமக தொண்டர்களும் இணக்கமாக பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்துகிறது.

    கவுரவம்

    கவுரவம்

    அதேபோல, தனித்து போட்டி என்பதற்கு 31.36 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.. இதுதான் முக்கியம். இருக்கும் ஆப்ஷன்களில் இதற்குதான் வாக்குகளை மக்கள் அள்ளி தெளித்துள்ளனர்.. இது பாமக என்ற கட்சியின் அடையாளத்தை, தனித்துவத்தை பிரதிபலிக்கிறது.. அக்கட்சி வளர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது.. தனித்து நின்றால்தான் பாமகவுக்கு கெளரவம் என்பதை உணர்த்துகிறது.

    பாமக பிளஸ்

    பாமக பிளஸ்

    பாமக தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைவுதான். கிட்டத்தட்ட இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் அக்கட்சியின் கள வேலைகள் மிக அதிகம்.. தொண்டர்கள் ஆழமாக இறங்கி வேலை பார்த்துள்ளனர்.. அதன் பலன்தான் கடந்த இடைத்தேர்தல்களில் எதிரொலித்தது. ஒருவேளை அதிமுகவை வெற்றி பெற வைத்ததுகூட இப்போது பாமகவினருக்கு தெம்பை தந்திருக்கலாம். ஆக.. இந்த கணிப்பை பொறுத்தவரை... கூட்டிக்கழித்து பார்த்தால்.. பாமக தனித்து போட்டி அல்லது ரஜினியுடன் கூட்டணி என்றே எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.. எப்படி பார்த்தாலும் பாமகவுக்கு இது பிளஸ்தான்!!!

    English summary
    Will PMK have an alliance with Rajinikanth or dmk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X