For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூகவிரோதிகள் என கூறிய கருத்துக்கு ரஜினி வருத்தம் தெரிவித்திருக்கலாமே!

ரஜினிகாந்த் பொத்தாம் பொதுவாக சமூகவிரோதிகள் என கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சமூகவிரோதிகள் என கூறியதற்கு ரஜினி வருத்தம் தெரிவித்திருக்கலாமே!

    சென்னை: பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த், சமூகவிரோதிகள் என பொதுவாக கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்ப்பு நிலவுகிறது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த 22-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர்.

    கருத்துகள்

    கருத்துகள்

    இவர்கள் போலீஸாரை தாக்கியதால் மட்டுமே வன்முறை ஏற்பட்டது என்றார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடந்த பிரஸ் மீட்டில் சமூகவிரோதிகள் என்றால் யார் என்றும் போலீஸுக்கும் ஆதரவான கருத்துகளையே கூறுகிறீர்களே என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    சமூகவிரோதிகள்

    சமூகவிரோதிகள்

    அதற்கு ரஜினி பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிவிட்டு சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில் ரஜினிகாந்த் இன்று வருத்தம் தெரிவித்தார். நியாயமாக பார்த்தால் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டியது சமூகவிரோதிகள் என்று கூறியதற்குத்தான்.

    ஒரு நபர் குழு

    ஒரு நபர் குழு

    துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீஸ் விசாரணை, சிபிசிஐடி விசாரணை, நீதிபதி சுகுணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை என யாருமே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

    ரஜினியால் வருத்தம்

    ரஜினியால் வருத்தம்

    சுருக்கமாக சொல்ல போனால் வன்முறையாளர்கள் யார் என்பது குறித்து அரசும் எந்தஒரு முடிவையும் எடுக்காத பட்சத்தில் தான்தோன்றித்தனமாக ஒரு கருத்தை பொத்தாம் பொதுவாக அழுத்தம் திருத்தமாக, விடாபிடியாக ரஜினி கூறியது அப்பகுதி மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

    ரஜினி வருத்தம் தெரிவிப்பாரா

    ரஜினி வருத்தம் தெரிவிப்பாரா

    தீர விசாரணைக்கு பிறகு எடுக்கப்படும் ஒரு முடிவை ஆரம்பத்திலேயே கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்ததை போன்று சமூகவிரோதிகள் என்று போகிற போக்கில் கூறியதற்கும் ரஜினி வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    English summary
    Will Rajini regret for his comment on anti social elements? Yesterday Rajini told some anti social elements getin to the protest and stimulate violence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X