For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலக வலியுறுத்துவேன் : டி.டி.வி தினகரன்

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலக வலியுறுத்துவேன் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வரை நீக்க வேண்டும்-டிடிவி | முதல்வர் சட்டசபையில் அறிக்கை- வீடியோ

    சென்னை : தமிழகத்தில் நடைபெறும் மோசமான ஆட்சிக்கு பொறுப்பேற்றும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமாகவும் இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தப் போவதாக டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது. இதில் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடத்தப்படவுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்னையை கிளப்ப முடிவு செய்துள்ளன.

    Will request CM Edappadi to Resign says TTV Dhinakaran

    முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் பேசுகையில், இத்தனை உயிர்பலிக்குப் பிறகே ஸ்டெர்லைட்டை மூட அரசு முடிவு செய்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு இருக்கும் நில விரிவாக்க ஆணையை ரத்து செய்தது நல்ல முடிவு. ஆனால் இது வெறும் தற்காலிகத் தீர்வுதான் . இதில் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் மோசமான ஆட்சியைக் கண்டித்தும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பொறுப்பேற்க வேண்டியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்ய சட்டசபையில் வலியுறுத்தப் போவதாக டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Will request CM Edappadi to Resign says TTV Dhinakaran. TN Assembly Session Starts today and Opposition Parties to rise questions on Thoothukudi Firing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X