For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரத்குமார் நிலைமை இப்படி ஆயிருமோ?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஃபேஸ்புக்கில் வெளியான மீம்ஸில் கூறப்பட்டது போன்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் நிலைமை ஆகிவிடுமோ?

2 எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக கூட்டணியில் இருந்து வந்தார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார். தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வான சரத்குமார் துவக்கத்தில் ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுத்தார். அதன் பிறகு ஜெயலலிதா சரத்குமாரை ஒதுக்கி வந்தார்.

Will Sarath Kumar's situation become like this?

நடிகர் சங்க தேர்தலில் ஜெயலலிதா சரத்குமாரை கைகழுவிவிட்டார். இதனால் அவர் மீது சரத்குமார் கடும் அதிருப்தியில் இருந்தார். அண்மையில் அவரது கட்சியும் உடைந்தது. சரத்குமார் தனது கட்சி எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயாணனை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து ச.ம.க.வினர் பலர் கட்சியில் இருந்து விலகினர்.

இந்நிலையில் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்று கூறி சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜகவின் பக்கம் சென்றார். பாஜகவோ தேமுதிகவை தனது கூட்டணியில் சேர்க்க பெரும் முயற்சி செய்து தோற்றது.

பேசாமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என்ன என்ற யோசனையில் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் சரத்குமாரின் நிலைமை தான் பாவம்.

பாஜக அதிமுகவுல போயி சேரப் போவது, நாட்டாமை துண்ட காணோம், துணியைக் காணோம்னு மறுபடியும் ஓடப் போறாறு என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் வெளியான மீம்ஸ் உண்மையாகிவிடுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
As BJP is thinking about having alliance with ADMK, SMK chief who recently ditched the ruling party and joined hands with the national party is in a difficult situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X