For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக பாணியில் திமுக... ஒருவருக்கு ஒரு பதவி - ஸ்டாலினும் ராஜினாமா செய்கிறார்?

பாஜக பாணியில் திமுகவும் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒருவருக்கு ஒரு பதவி.. ராஜினாமா செய்யும் ஸ்டாலின்..!!

    சென்னை: பாரதிய ஜனதா கட்சி பாணியில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை கையில் எடுத்துள்ளது திமுக. அதன்படி கட்சியில் பொருளாளர், செயல்தலைவர் என்ற பதவியை வைத்துள்ள ஸ்டாலினும் தனது ஒரு பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திமுகவில் 2 பதவிகளில் இருப்போர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் பொதுச்செயலாளர் அன்பழகன்.

    ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை பாஜக கடைப்பிடித்து வருகிறது. முதல்வராக, மத்திய அமைச்சராக இருக்கும் பாஜக தலைவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது. ஆனால் திமுக, அதிமுகவில் அப்படியில்லை.

    அமைச்சராக இருப்பவர்கள், கட்சியில் பதவியில் இருப்பார்கள். கட்சி நிர்வாகத்தில் ஒருவர் இரு பதவியில் இருப்பது சர்வ சாதாரணம். இதனால் பல தொண்டர்கள், இன்னமும் தொண்டர்களாகவே இருக்கின்றனர்.

    கருணாநிதி - ஸ்டாலின்

    கருணாநிதி - ஸ்டாலின்

    திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக உடல்நலக்குறைவினால் செயல்பட முடியாமல் இருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின். அவர் தலைவரான பின்னர் சந்தித்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் டெபாசிட்டை பறிகொடுத்தார்.

    குறை கேட்கும் ஸ்டாலின்

    குறை கேட்கும் ஸ்டாலின்

    நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். கட்சி தொடங்கி விட்டார் கமல், தங்களின் கட்சியில் உள்ளவர்கள் நடிகர்களின் கட்சிக்கு தாவுவதை தடுக்க தொண்டர்களை, நிர்வாகிகளை அழைத்து குறை கேட்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

    நிர்வாகிகளுடன் தோழமை

    நிர்வாகிகளுடன் தோழமை

    மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி, கள ஆய்வு நடத்தும் ஸ்டாலின், நிர்வாகிகளின் குறைகளை புகார் பெட்டியில் போடச் சொல்கிறார். இதன்படி களையெடுக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

    ராஜினாமா செய்யுங்க

    ராஜினாமா செய்யுங்க

    இதனை அடிப்படையாக வைத்துதான் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளது திமுக.
    2 பதவிகளில் இருப்போர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் பொதுச்செயலாளர் அன்பழகன்.

    இரண்டு பதவியில் ஸ்டாலின்

    இரண்டு பதவியில் ஸ்டாலின்

    புதிய நிர்வாகிகளை நியமித்து மார்ச் 31ம் தேதிக்குள் மாவட்ட செயலாளர்கள் திமுக தலைமையிடம் பட்டியல் தர வேண்டும் என்றும் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார். 1984இல் மு.க. ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார் ஸ்டாலின்.

    எந்த பதவியை விட்டுக்கொடுப்பார்

    எந்த பதவியை விட்டுக்கொடுப்பார்

    திமுக செயல் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார் ஸ்டாலின். இதனையடுத்து தனது இளைஞரணி செயலாளர் பதவியை வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு விட்டுக்கொடுத்தார். இப்போது கட்சியின் பொருளாளராகவும், செயல் தலைவராகவும் இருக்கிறார் ஸ்டாலின். புதிய அறிவிப்பின் படி தனது எந்த பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்வார்? தனது பதவியை உதயநிதி ஸ்டாலின் வசம் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    English summary
    DMK has asked its functionaries to resign if they are enjoying more than one posts. So, it is expected that DMK working president MK Stalin may soon resign from his Youth wing secretary post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X