For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த வாட்டியாவது கொஞ்சம் "கம்மி"யான கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்துமா தமிழக கட்சிகள்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வந்து விட்டது. கூட்டணிகள் குறித்து கட்சிகள் அலைபாய்ந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் வேட்பாளர்கள் எப்படி இருப்பார்கள் என்ற கவலையில் மக்கள் உள்ளனர்.

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில்மொத்தம் 2748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் பலரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்.

சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 பேரில் 70 பேர் கிரிமினல் வழக்குகளைச் சுமந்து கொண்டிருந்தவர்கள் ஆவர். இதோ இவர்கள் எம்.எல்.ஏக்களாக தங்களது "கடமையை"யும் முடித்து விட்டுக் கிளம்பியும் விட்டனர்.

ஜனநாயக மறுமலர்ச்சிக்கான அமைப்பு

ஜனநாயக மறுமலர்ச்சிக்கான அமைப்பு

ஜனநாயக மறுமலர்ச்சிக்கான அமைப்பு என்ற அமைப்பு இதுதொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக எம்.எல்.ஏக்களின் குற்றப் பின்னணி விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதிக அளவிலான கிரிமினல்கள் .. அதிமுக

அதிக அளவிலான கிரிமினல்கள் .. அதிமுக

அதிக அளவிலான கிரிமினல் வழக்குகள் இருப்பது அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதுதான். அதாவது அக்கட்சியின் 150 எம்.எல்.ஏக்களில் 49 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாம். இது 33 சதவீதம் ஆகும்.

2வது இடத்தில் திமுக

2வது இடத்தில் திமுக

2வது இடத்தில் திமுக வருகிறது. அக்கட்சியின் 23 எம்.எல்.ஏக்களில் 7 பேர் மீது வழக்குகள் உள்ளன. இது 30 சதவீதமாகும்.

3வது இடத்தில் தேமுதிக

3வது இடத்தில் தேமுதிக

3வது இடத்தில் தேமுதிக உள்ளது. அக்கட்சியின் 29 எம்.எல்.ஏக்களில் 6 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இது 21 சதவீதமாகும்.

37 பேர் மீது கொலை வழக்கு

37 பேர் மீது கொலை வழக்கு

இந்த 70 எம்.எல்.ஏக்களில் 37 பேர் மீது, கொலை, கொலை முயற்சி, கடத்தல், வழிப்பறி, மிரட்டல் ஆகிய கடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சீரியஸ் குற்றவாளிகள்

சீரியஸ் குற்றவாளிகள்

இந்த சீரியஸ் குற்றவாளிகளில் 29 பேர் அதிமுகவினர். திமுக, சிபிஎம் தலா 2, சிபிஐ, புதிய தமிழகம், பாமக, தேமுதிக தலா 1 என அடக்கம்.

51 சதவீத கோடீஸ்வரர்கள்

51 சதவீத கோடீஸ்வரர்கள்

மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏக்களில் 120 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அதாவது 51 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.

பணக்கார திமுக

பணக்கார திமுக

எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பை வைத்துப் பார்த்தால் திமுக எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்புரூ. 9.21 கோடியாக உள்ளது. காங்கிரஸ் ரூ.4.41 கோடியாகவும், அதிமுக ரூ. 3.71 கோடியாகவும், தேமுதிக ரூ. 3.40 கோடியாகவும் உள்ளது.

லட்சாதிபதிகள்

லட்சாதிபதிகள்

மொத்தம் உள்ள 234 உறுப்பினர்களில் 122 பேருக்கு ரூ. 5 லட்சம் அதற்கு மேலான சொத்துக்கள் உள்ளன.

பான் கார்டு இல்லாத 59 பேர்

பான் கார்டு இல்லாத 59 பேர்

234 எம்.எல்.ஏக்களில் 59 பேரிடம் அதாவது 25 சதவீத எம்.எல்.ஏக்களிடம் பான் கார்டு இல்லையாம் அல்லது அதுகுறித்த விவரத்தை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

பெண் எம்.எல்.ஏக்கள்

பெண் எம்.எல்.ஏக்கள்

தமிழக சட்டசபையில் வழக்கம் போல ஆணாதிக்கமே மேலோங்கியிருந்தது. அதாவது பெண் எம்.எல்.ஏக்கள் 17 பேர் மட்டுமே. மற்ற 217 பேரும் ஆண்கள்தான். அதாவது மொத்த எம்.எல்.ஏக்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.

பட்டதாரிகள் அதிகம்

பட்டதாரிகள் அதிகம்

மொத்தம் உள்ல 234 பேரில் 113 பேர் அதாவது 48 சதவீதம் பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கும் மேல் படித்தவர்கள் ஆவர்.

பணக்கார சரத் கட்சி எம்.எல்.ஏ

பணக்கார சரத் கட்சி எம்.எல்.ஏ

தமிழக எம்.எல்.ஏக்களிலேயே மிகப் பெரிய பணக்காரர் நாங்குநேரி உறுப்பினரான எர்னாவூர் நாராயணன்தான். இவரது சொத்து மதிப்பு ரூ. 103.28 கோடியாகும். இவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார். ஆனால் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

2வது பெரும் பணக்காரர் திமுகவின் கேசிபி

2வது பெரும் பணக்காரர் திமுகவின் கேசிபி

2வது பெரிய கோடீஸ்வரர் திமுகவின் கே.சி.பழனிச்சாமி ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ. 67.65 கோடி ஆகும்.

English summary
The polls in Tamil Nadu are round the corner. With parties busy stitching up alliances, it would also be interesting to know the manner in which the tickets are distributed among the candidates this time. Will the number of candidates with a criminal background reduce this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X