For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 தொகுதிகளிலும் வெற்றிக் கனி.. உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி.. திமுக போடுமா அதிரடி பிளான்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி-வீடியோ

    சென்னை: விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நடைபெற உள்ள 2 தொகுதிகளிலும் உதயநிதியின் பிரச்சாரத்தை நம்பி திமுக களம் இறங்க போகிறது என்பது மட்டும் ஓரளவு யூகிக்க முடிகிறது.

    இளைஞர் அணி தலைவர் பதவிக்கு பிறகு மிக மிக வேகமாக கட்சிக்குள் முன்னேறி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ஒரு பக்கம் இளைஞர்களுக்கு இது எழுச்சி தந்துள்ளது என்றாலும், கட்சியின் நிர்வாகிகள் இதை ரசிக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

    வாரிசு அரசியல் என்ற ஒன்றை முன்னிறுத்தியே செயல்படுத்தப்படும் இதுபோன்ற காரியங்களால் மூத்த தலைகள், முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    நாங்குநேரியில் நாங்கதான் போட்டியிடுவோம்.. அடம் பிடிக்கும் பாஜக- அதிர்ச்சியில் அதிமுகநாங்குநேரியில் நாங்கதான் போட்டியிடுவோம்.. அடம் பிடிக்கும் பாஜக- அதிர்ச்சியில் அதிமுக

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    இந்த சமயத்தில், உதயநிதி நாங்குநேரியில் போட்டியிட திமுக விரும்புவதாகவும், அதை தங்களுக்கு விட்டுத்தருமாறு காங்கிரசிடமே அன்று மேடையில் வைத்து நேரடியாக கேட்டபோது, இன்னும் அதிர்ச்சியையும், திமுக நிர்வாகிகள் சிலருக்கு காழ்ப்புணர்ச்சியையும் தந்தது.

    விக்கிரவாண்டி

    விக்கிரவாண்டி

    ஆனால் இப்போது நாங்குநேரி, காங்கிரசுக்கு என்று முடிவாகிவிட்டதும் ஓரளவு அதிருப்தியாளர்கள் நிம்மதி ஆனார்கள். அதே சமயம், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்று அறிவித்ததுமே, திரும்பவும் இவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. அப்படின்னா, விக்கிரவாண்டியில் உதயநிதிதானா? என்ற கேள்வி சந்தேகம் இவர்களுக்கு எழ ஆரம்பித்துள்ளது.

    களை கட்டும்

    களை கட்டும்

    ஒருவேளை விக்கிரவாண்டியில் உதயநிதியை நிறுத்த காரணமும் உள்ளது. விழுப்புரத்தில் திமுக ஏற்கனவே பலமாக இருக்கிறது. இந்த பலம் வாய்ந்த தொகுதியில் உதயநிதியை நிறுத்தினால், மிகவும் எளிதாக வெற்றி பெற முடியும் என்று மேலிடம் கணித்துள்ளதாக தெரிகிறது. அப்படி விக்கிரவாண்டியை உதயநிதிக்கு ஒதுக்கினால் போட்டி கண்டிப்பாக களை கட்டும்.

    தேனி பார்முலா

    தேனி பார்முலா

    ஒருவேளை விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியிடாவிட்டாலும், 2 தொகுதிகளிலும் இவர் தலைமையில் பிரச்சாரம் நடைபெறம் என்றே தெரிகிறது. என்னதான் நாங்குநேரி காங்கிரசின் மண் என்றாலும், ஒருவேளை அதிமுகவின் "தேனி பார்முலா"வால் இந்த முறை வெற்றிபெறா விட்டால், அது திமுவுக்கு சறுக்கலாகவே அமையும்.

    வளர்ச்சி

    வளர்ச்சி

    வம்படியாக காங்கிரஸ் கேட்டு வாங்கிய தொகுதி என்றாலும், முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இந்த தொகுதியை திமுக விட்டுவிடுமா என தெரியவில்லை. அதனால் உதயநிதி நாங்குநேரியில் பிரச்சாரத்தை கையில் எடுப்பார் என்றே தெரிகிறது. மேலும் 2 தொகுதிகளிலும் உதயநிதியை முன்னிலைப்படுத்தி வெற்றியைத் தட்டிச் சென்றால் அது உதயநிதியின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதால் திமுக இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது.

     யதார்த்த உதயநிதி

    யதார்த்த உதயநிதி

    பொதுவாக, புள்ளிவிவரத்துடன், சரவெடியாக உதயநிதியின் பிரச்சாரம் இருப்பது இல்லை. ஆனால் வெகுஜன மக்களை கவரும் வகையில் யதார்த்தமான பேச்சாக இவரது பிரச்சாரங்கள் இதுவரை இருந்து வருகிறது. தனக்கே உரிய கேஷூவல் பேச்சுதான் உதயநிதியின் ஸ்பெஷலே! அந்த வகையில் 2 தொகுதிகளிலுமே உதயநிதி தலைமையில் பிரச்சாரம் நடைபெறும் என்றும், 2 தொகுதிகளையும் திமுக அள்ளுவதே குறிக்கோளாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Tamil Nadu By Elections 2019: DMK Youth Wing Secretary Udhayanidhi Stalin chance to campaign in Nanguneri and Vikkiravandi elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X