For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூப்பனாரின் "சைக்கிளுக்கும்", ஜி.கே.வாசனின் "ஓவராயில்" செய்த சைக்கிளுக்கும்... 6 அல்ல 60 வித்தியாசம்

Google Oneindia Tamil News

சென்னை: ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை ஆரம்பித்தபோது அது பெரும் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால் ஜி.கே.வாசன் அதே அளவிலான வெற்றிகளைச் சாதிப்பது என்பது கனவில் மட்டுமே முடியும் என்பதே நிதர்சனம்.

ஜி.கே.மூப்பனார் புதுக் கட்சி ஆரம்பித்தால் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒன்று. அதற்கேற்றார் போல அவருக்கு சாதகமாக அத்தனை சூழலும் அன்று இருந்தது.

ஆனால் ஜி.கே.வாசனின் நிலை அப்படி இல்லை. மீண்டும் தனித்து வரலாம், வந்தால் ஓரளவு பாதிப்பை காங்கிரஸுக்கும், எதிர்த் தரப்புக்கும் ஏற்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டபோதெல்லாம் அதை அவர் தவிர்த்து விட்டார். இப்போது எந்த வகையிலும் அவருக்கு சாதகமான அரசியல் சூழல் இல்லாத நிலையில் வெளியில் வந்துள்ள அவர் தனது தந்தையைப் போல பெரும் சாதனை புரிவார் என்பதை நிச்சயம் அவரே கூட எதிர்பார்க்க முடியாது.

அதை விட முக்கியம், மூப்பனார் காலத்திலேயே தமாகா கரைந்து போய் விட்டது என்பதுதான். அவரை விட்டு அவரது நி்ழலாக இருந்த ப.சிதம்பரமே பிரிந்து போய் விட்டார் என்பதும் மறக்கக் கூடாத ஒன்றாகும்.

பக்கபலம் அதிகம்

பக்கபலம் அதிகம்

மூப்பனார் 1998ம் ஆண்டு தமாகாவை தொடங்கியபோது அவருக்கு பக்கபலமாக பல காரணிகள் இருந்தன.

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் வாய்ஸ்

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் வாய்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிதான் அதில் முக்கியமான காரணி. மூப்பனாரே கூட ரஜினியை நம்பித்தான் புதுக் கட்சியையும் தொடங்கினார். ரஜினி மூலம் கிடைத்த பூஸ்ட்தான் தமாகாவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற வைத்தது. அதை விட முக்கியமாக அது "ரஜினி கட்சி" என்று மக்கள் நினைத்ததால்தான் மூப்பனாருக்கு மக்கள் வெற்றியைக் கொடுத்தனர். ஆனால் இன்று வாசனுக்கு ரஜினி ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

அடுத்து ப.சிதம்பரம். வியூகங்களை வகுப்பதில் அப்போது மூப்பனாருக்கு முக்கிய புள்ளியாக ஆலோசகராக திகழ்ந்தவர் ப.சிதம்பரம். காங்கிரஸில் மூப்பனார் இருந்தபோதே அவருடைய நிழல் போல திகழ்ந்தவர் ப.சிதம்பரம். எனவே ப.சிதம்பரத்தின் பக்க பலமும் மூப்பனாருக்கு உதவியது. இன்று ப.சிதம்பரம், வாசனுடன் இல்லை.

மக்கள் அலை இல்லை

மக்கள் அலை இல்லை

அன்று மூப்பனார் கட்சி தொடங்கியபோது ஒட்டுமொத்த தமிழக மக்களும் அப்போதைய அதிமுக ஆட்சி மீது கடும் அதிருப்தி, கோபத்துடன் இருந்தனர். கூடவே திமுகவும் வந்தது. சோ போன்ற முக்கியஸ்தர்களும் உரிய அறிவுரைகளை வழங்கத் தவறவில்லை. இப்படி எல்லாமே சாதகமாக இருந்தது மூப்பனாருக்கு.

முக்கியத் தலைவர்கள்

முக்கியத் தலைவர்கள்

மூப்பனாருடன் அன்று கிட்டத்தட்ட தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் அத்தனை பேரும் வெளியேறி வந்தார்கள். பழம்பெரும் காங்கிரஸார் அவர்கள். இவர்களின் துணையும், பணியும் மூப்பனாருக்கு பணிகளை சுலபமாக்கியது.

விடியல் சேகரை வைத்துக் கொண்டு???

விடியல் சேகரை வைத்துக் கொண்டு???

ஆனால் இன்று வாசனுடன் யார் யார் இருக்கிறார்கள். தனுஷ்கோடி ஆதித்தன் இல்லை, அருணாச்சலம் இல்லை, ப. சிதம்பரம் இல்லை.. இன்னும் பலர் இல்லை. விடியல் சேகரும், கோவைத் தங்கமும், ஞானதேசிகனும்தான் உள்ளனர்.. இவர்களுக்கு மத்தியில் செல்வாக்கு கிடையாது.

இவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் வாசன்

இவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் வாசன்

எனவே இப்படிப்பட்ட தலைவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார் வாசன் என்பது தெரியவில்லை.

இளங்கோவனை சமாளிக்க முடியுமா முதலில்...

இளங்கோவனை சமாளிக்க முடியுமா முதலில்...

தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருக்கலாம். அதில் யாருக்குமே சந்தேகம் இல்லை. ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக இருக்கிறா். ப.சிதம்பரம் இருக்கிறார். இன்னும் பல முக்கிய காரிய வீரர்கள் காங்கிரஸில் உள்ளனர். இவர்களை வாசனால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. குறிப்பாக இளங்கோவனை சமாளிக்க முடியுமா என்பதுதான் முக்கியமானது.

ஜெயலலிதா கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர் இளங்கோவன்

ஜெயலலிதா கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர் இளங்கோவன்

மூப்பனார், வாழப்பாடியாருக்குப் பின்னர் காங்கிரஸுக்குக் கிடைத்த சரியான தலைவர் இளங்கோவன் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்க முடியாது. வாழப்பாடியார் போலவே யாருக்கும் பயப்படாமல் சுயமாக சிந்தித்து அதிரடியாக செயல்படக் கூடியவர் இளங்கோவன். அப்போது ஜெயலலிதாவை எதிர்த்து தீவிர அரசியல் செய்தவரும் கூட. எனவே அப்படிப்பட்டவரை எதிர்த்து வாசன் எப்படி அரசியல் செய்ய முடியும்.

நேரடியாக போட்டியிடக் கூட விரும்பாதவர்

நேரடியாக போட்டியிடக் கூட விரும்பாதவர்

இன்னொரு பின்னடைவு என்னவென்றால், வாசன் நேரடியாக மக்களைச் சந்தித்து இதுவரை தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. ராஜ்யசபா மூலமாகத்தான் அவர் இதுவரை எம்.பியாகியிருக்கிறார். மக்களைச் சந்தித்து தேர்தலில் போட்டியிடாதவர் அவர். எனவே அதுவும் கூட அவருக்கு ஒரு பெரும் பின்னடைவுதான்.

பகடைக் காயாக மாறும் அபாயம்

பகடைக் காயாக மாறும் அபாயம்

இன்னும் ஒரு சிக்கலும் இருக்கிறது. கண்டிப்பாக வாசனால் தனித்து ஆவர்த்தனம் செய்ய முடியாது. யாருடனாவது கூட்டு சேர்ந்துதான் ஆக வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது திமுகவும் சரி, அதிமுகவும் சரி, விரல் விட்டும் எண்ணும் அளவுக்குத்தான் சீட் கொடுப்பார்கள்.

தனிக் கூட்டணி அமைத்தால் அவ்ளோதான்

தனிக் கூட்டணி அமைத்தால் அவ்ளோதான்

அப்படி இல்லாமல் தனித்துக் கூட்டணி அமைத்தால் யார் வந்து சேருவார்கள்.. அதிகபட்சம் விஜயகாந்த் வந்து சேரலாம். சில பல அல்லு சில்லு கட்சிகள் வந்து கூட்டம் போட்டு கும்மியடிக்கலாம்.. விளைவு எல்லாத் தொகுதியிலும் டெபாசிட் காலி என்ற செய்திதான் வந்து சேரும்.

ஆதரவாளர்களுக்காக கட்சி ஆரம்பித்தால்

ஆதரவாளர்களுக்காக கட்சி ஆரம்பித்தால்

தனது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், கோபமாக இருக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள் என்பதற்காக மீண்டும் வாசன் தனிக் கட்சி கண்டால் நிச்சயம் அது அவருக்கு லாபமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

சரியான நேரத்தில் எடுக்காத முடிவு

சரியான நேரத்தில் எடுக்காத முடிவு

மொத்தத்தில் மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது இருந்த நிலை இப்போது இல்லை. வாசனுக்கு இதுவே பெரும் பின்னடைவுதான். சரியான நேரத்தில் எடுக்காத எந்த முடிவும் தோல்வியிலேயே முடியும் என்பார்கள். அந்த நிலையில்தான் வாசன் இருப்பதாக நமது அறிவுக்குத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் விட

எல்லாவற்றையும் விட

ஆனானப்பட்ட மூப்பனாரே எந்தக் கட்சியை பிறந்ததுமே பெரும் வெற்றியைக் காண வைத்தாரோ, அதேக் கட்சியை பெரும் தோல்விக் கட்சியாக மாற்றிய பின்னர்தான் மறைந்து போனார். மிகக் குறுகிய காலமே தமாகாவின் அரசியல் வெற்றி என்பது இருந்தது. எனவே ஒன்றுக்கு ஆயிரம் முறை வாசன் யோசித்தாக வேண்டும்.

English summary
The scenario in 1998 , when Moopanar launched his TMC is not the same in 2014 for his son G K Vasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X