For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதோ இன்று முதல் அரசியல் களத்தில்... "சின்ன கேப்டன்" விஜய பிரபாகரன்!

முக்கிய பொறுப்பு விஜயகாந்த் மகனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலில் களமிறங்க போகும் விஜயகாந்த் மகன்

    சென்னை: விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை கட்சியில் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஜாம்பவான்கள் ஆட்சி செலுத்தும்போதே அரசியலில் இறங்கியவர் விஜயகாந்த்!! திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தனித்து போட்டி என்ற அறிவிப்பில் களம் கண்டவர்!! சினிமா சீனியர்கள் கமல், ரஜினியின் அரசியல் சீனியர் விஜயகாந்த்!! ஆரம்பித்த வேகத்திலேயே தேமுதிகவை தூக்கி நிறுத்தி கோபாலபுரத்தையும், போயஸ் தோட்டத்தையும் மிக குறைந்த நாட்களிலேயே திரும்பி பார்க்க வைத்தவர்!!

    கூடாரம் காலி

    கூடாரம் காலி

    கூட்டணி குழப்பம் தேமுதிகவை அசைத்து பார்க்க ஆரம்பிக்க.... உட்கட்சி பிரச்சனை தலைதூக்க.... பின்னர் அக்கட்சி மெல்ல மெல்ல கரைய.... விஜயகாந்த் உடல்நிலை குன்ற.... ஒட்டுமொத்தமாகவே கூடாரம் காலியாக தொடங்கியது. நிர்வாகிகள், தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்கு நடையை கட்ட தொடங்கினார்கள். பிரச்சனையை சரிக்கட்டி கட்சியை தூக்கி நிறுத்தலாம் என்றால் விஜயகாந்திற்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.

    ஈர மனசுக்காரன்

    ஈர மனசுக்காரன்

    அமெரிக்காவுக்கும், மியாட் மருத்துவமனைக்கும் சென்று வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு மட்டுமில்லாமல், தமிழக மக்களுக்கே மிகவும் வேதனையை தந்தது. எப்படியாவது விஜயகாந்த் மீண்டும் உடல்நலத்துடன் திரும்பி வந்துவிட மாட்டாரா என்று அரசியலையும் தாண்டி இப்போதும் நினைக்க காரணம், அவரது ஈரமனசுதான்.

    இளைஞரணி பொறுப்பா?

    இளைஞரணி பொறுப்பா?

    இந்நிலையில், தேமுதிக அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லவும், நம்பி இருக்கும் தொண்டர்களை தொடர்ந்து வழிநடத்தவும் விஜயகாந்த் தனது மூத்த மகனை அரசியல் களத்தில் இறக்க உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி பொறுப்பும் தரப்பட இருக்கிறார்கள் என்ற பேச்சு 2 மாதங்களுக்கு முன்பிருந்தே அரசல்புரசலாக ஆரம்பமானது. அதற்கேற்றார்போல் இளைஞரணி செயலாளர் பொறுப்பு அந்த கட்சியில் நீண்ட காலம் காலியாகவே உள்ளது. இது விஜய பிரபாகரனுக்குத்தானா என்றும் தெரியவில்லை. இந்நிலையில், தேமுதிக அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லவும், நம்பி இருக்கும் தொண்டர்களை தொடர்ந்து வழிநடத்தவும் விஜயகாந்த் தனது மூத்த மகனை அரசியல் களத்தில் இறக்க உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி பொறுப்பும் தரப்பட இருக்கிறார்கள் என்ற பேச்சு 2 மாதங்களுக்கு முன்பிருந்தே அரசல்புரசலாக ஆரம்பமானது. அதற்கேற்றார்போல் இளைஞரணி செயலாளர் பொறுப்பு அந்த கட்சியில் நீண்ட காலம் காலியாகவே உள்ளது. இது விஜய பிரபாகரனுக்குத்தானா என்றும் தெரியவில்லை.

    பேட்மிண்டன் அணி

    பேட்மிண்டன் அணி

    விஜய்பிரபாகரனை பற்றி நமக்கு சமீபத்தில்தான் சில விஷயங்கள் காதில் வந்து விழுகிறது. இவர் ஒரு பேட்மிண்டன் பிரியர் என்றும், அதற்கான அணி ஒன்றையும் நடத்தி வருவதாகவும் மீடியா மூலம் அறிந்தோம். அது மட்டுமல்லாமல், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் நாய்களை இவர் வளர்த்து வருபவர் என்றும் தெரியும். மற்றபடி, அரசியல் அனுபவம் விஜய்பிரபாகரனுக்கு இருக்கிறதா என்று தமிழக மக்களுக்கு தெரியவில்லை. அரசியலில் விஜயகாந்த் தனது மகனை இறக்குவதை நாம் குறையாக பார்க்க முடியாது. காரணம் நிறைய வாரிசு அரசியல் கண்ட மாநிலம் இது.

    கன்னி பேச்சு

    கன்னி பேச்சு

    தேமுதிகவின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா இன்று அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் நடக்க உள்ளது. இதில் விஜய்பிரபாகரன் கலந்து கொண்டு பேச போகிறார். கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ள இந்த விழாவில் விஜய்பிரபாகரனின் கன்னி பேச்சு எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

    பிம்பத்தை ஏற்பார்களா?

    பிம்பத்தை ஏற்பார்களா?

    ஆனால், தமிழக அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் களமிறங்குபவர்களை திராவிட கட்சிகள் எப்படி சூழ்ச்சி செய்து வேட்டையாடுகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஜயகாந்த்தான். இதனை விஜய் பிரபாகர் சரியாக புரிந்து கொள்வாரா? அல்லது தேமுதிக என்றாலே அது விஜயகாந்த் என்று ஏற்றுக் கொண்ட மக்கள், விஜய்பிரபாகர் என்ற பிம்பத்தை ஏற்றுக் கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்

    English summary
    Will Vijayakanth's son be given a major responsibility in the party?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X