For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்யா ஆண்ட்டியின் அட்ராசிட்டி.. கும்பலாக வலையில் விழுந்த பெண்கள்.. மிரண்டு போன ராணிப்பேட்டை போலீஸ்

மோசடி புகாரில் கைதான பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: ஒரு மோசடி வழக்கில் பெண் ஒருவர் கைதாகி உள்ளார்.. இது சம்பந்தமாக அரசியல் புள்ளிகளுடனும் அவருக்கு தொடர்பு இருக்குமா என்ற ரீதியில் ராணிப்போட்டை போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சத்யா.. பார்ப்பதற்கு டிப்டாப்பாக இருப்பார்.. இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஃபிட்னஸ் சென்டருக்கு அடிக்கடி சென்று வருவார்.. அதேபோல பியூட்டி பார்லர்களுக்கும் சென்று, அங்கு வரும் எல்லா பெண்களிடமும் நெருக்கமாக பழகுவார்.

தன்னுடைய சோஷியல் பேச்சுதான் சத்யாவின் மிகப்பெரிய மூலதனம்... ஒரு பைனான்சியர் என்று சொல்லி கொண்டு அனைவரிடமும் நட்பை விரித்துள்ளார்.. அவர்களின் குடும்ப சூழலையும் பேச்சுவாக்கில் கேட்டு தெரிந்து கொள்வார்.

 பைனான்சியர்

பைனான்சியர்

"பேங்கில் ஒரு லட்சம் முதலீடு செய்றீங்கன்னு வெச்சுக்குங்க, ஒரு மாசம் கழித்து 600 ரூபாய், 700 ரூபாய்தான் கிடைக்கும்.. ஆனால், அதுவே என்கிட்ட ஒரு லட்சம் பைனான்ஸில் கட்டினால் 5 நாளைக்கு ஒருமுறை 3 ஆயிரம் வட்டி கிடைக்கும்.. அதில் 2 ஆயிரம் உங்களுக்கு, கம்பெனிக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். 5 சவரன் நகை தந்தால், 10 நாளில் அந்த நகையை திருப்பி தரும்போது 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.. அதில் 3 ஆயிரம் உங்களுக்கு, 2 ஆயிரம் கம்பெனிக்கு" இதுதான் சத்யாவின் கில்லாடி வார்த்தைகள்.

நகைகள்

நகைகள்

இதில்தான், பெண்கள் மயங்கி விழுந்துள்ளனர்.. லட்சம் லட்சமாக பணத்தை தந்தனர்.. ஆரம்பத்தில் அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, அவர்கள் தந்த பணத்தையே வட்டியாக அவர்களிடம் திருப்பி தந்தாராம்.. இதை பார்த்ததும் 10 லட்சம் ரூபாய் வரை பெண்கள் சத்யாவிடம் பணத்தை நம்பி தந்தனர்.. நகைகளையும் அள்ளி கொண்டு வந்து தந்தனர். இப்போது, லட்சக்கணக்கில் கிடைத்த பணம், நகை என மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டார் சத்யா.

போலீஸ்

போலீஸ்

இதில் கொடுமை என்னவென்றால், பணம், நகை கொடுத்த பெண்கள் தங்கள் வீடுகளுக்கு தெரியாமலேயே இவைகளை கொண்டு வந்து தந்துள்ளனர்.. இதனால் வீட்டிலும், போலீசிலும் சொல்ல முடியாமல் விழித்துள்னனர்.. இறுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாரும் சேர்ந்து சத்யாவை வலைவீசி தேடி, ஒருகட்டத்தில் சிக்கினார் பைனான்சியர் சத்யா.. தங்கள் பணம், நகை குறித்து கேட்டதற்கு, "கம்பெனியில் நீங்க தந்த பணமும், நகையும் காலியாயிடுச்சு".. என்று சொல்லிவிட்டாராம்.

 ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

இதற்கு பிறகுதான் பெண்கள் ராணிப்பேட்டை போலீசில் மோசடி புகார் தந்துள்ளனர்.. சத்யா இவர்களை ஏமாற்றி 2 வருடமாகிறது.. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களால் முடிந்தவரை விரட்டி பிடித்து போராடியும் முடியாமல்தான் போலீசுக்கு வந்திருக்கிறார்கள்.. தனக்கு பின்னணியில் அரசியல் புள்ளிகள் இருப்பதாக சத்யா சொல்கிறாராம்.. ஆனால், அவர்கள் யார் என்பதை மட்டும் தெரிவிக்கவில்லையாம்.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

மோசடி புகாரின் பேரில் சத்யாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.. இப்போதைக்கு விசாரணை நடந்து வந்தாலும், அந்த அரசியல் விஐபிக்கள் யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது... சீட்டு பணம், கந்துவட்டி, போன்றவைகளில் ஏமாற வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், இன்னமும் ஒருசிலர் பணத்தாசையால் வாழ்வை தொலைப்பது தொடர்கதையாகி வருகிறது!

English summary
Woman arrested in Cheating case by Ranipet Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X