For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி: இரவில் டார்ச்சர் தரும் இன்ஸ்பெக்டர்... இளம்பெண் தற்கொலைக்கு முயற்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருச்சி: இன்ஸ்பெக்டர் கொடுத்த தொடர் தொந்தரவு காரணமாக திருச்சியில் இளம் பெண் ஒருவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்ணின் பெயர் கார்த்திகா தேவி. ஸ்ரீரங்கம் மேலூர் மேலத் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால் என்பவரின் மகளாவார்.

Woman attempts for suicide

புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் பணிபுரிகிறார். கடந்த தி.மு.க ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில், பட்ட பகலில், நடுரோட்டில் எஸ்.ஐ வெற்றிவேல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம். விசாரனையில் ஆள் மாறி கொலை நடந்தது. அந்த மாறி போன நபர்தான் இப்போது தற்கொலைக்கு தூண்டிய பிரச்சனையில் சிக்கி உள்ள இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன்.

கார்த்திகாதேவி (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து சில மாதங்களில் தனபால் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை மருமகன் மணிகண்டனுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். இதற்காக மணிகண்டன் ரூ.3 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த நிலத்தில் மணிகண்டன் செங்கற்சூளை வைத்து நடத்தி வருகிறார். இதை தொடர்ந்து கார்த்திகாதேவிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி கார்த்திகா தேவி விஷம் குடித்துள்ளார். பின்னர் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிய அவர் அதன் பிறகு பெற்றோர் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் தனபால் தனது ஒரு ஏக்கர் நிலத்தையும் திருப்பி தருமாறு மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அவர் திருப்பி தராமல் இழுத்தடித்ததால் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் தனபால் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், தனபால் மற்றும் மணிகண்டனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ரூ.3 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்தால் நிலத்தை திருப்பி தருவதாக மணிகண்டன் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரூ.3 லட்சம் பணத்தையும் கடந்த ஏப்ரல் மாதம் 12ம்தேதி தனபால், மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நிலத்தை திருப்பி கொடுக்கவில்லை.

மணிகண்டனுக்கு ஆதரவு

தனபால் காவல் நிலையத்திற்குச் சென்ற போது மணிகண்டனிற்கு ஆதரவாக போலீசார் பேசியதுடன் தனபால் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் டைப் ரைட்டிங் நிறுவனத்திற்கு படிக்க சென்ற கார்த்திகா தேவியை மணிகண்டனின் சகோதரர்கள் மிரட்டியதுடன் மணிகண்டன் காரில் கடத்தி செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் மிரட்டல்

இது குறித்து கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு தனபால் வீட்டிற்கு செல்போனில் பேசிய இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன், கார்த்திகா தேவியையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த கார்த்திகா தேவி ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு தென்னூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்குக் காரணம்

கார்த்திகா தேவி எழுதிய கடிதத்தில், தனது தந்தையின் சொத்தை கணவருக்கு எழுதி கொடுக்கும்படி இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுக்கிறார். மேலும் இரவு நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்வதுடன், விசாரணைக்கு தனியாக வரசொல்கிறார். உன் அப்பாவையும், அண்ணனையும் ஜெயிலில் தள்ளுவேன் என்று மிரட்டுகிறார்.

உடலை கூட தரவேண்டாம்

உன்னை வச்சு, இடத்தையும், உன் குடும்பத்தையும் என்ன பண்ணுகிறேன் பார் என்று மிரட்டுகிறார். நான் இருக்கவும் தானே இப்படி மிரட்டுகிறார். நான் இல்லாமல் போனால் இந்த பிரச்சனையே வராதே! அதனால் தான் அந்த முடிவுக்கு வருகிறேன். இந்த முடிவுக்கு காரணம் ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் தான். நான் இறந்தவுடன் என் உடலை கணவனுக்கு கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கள்ளக்காதல் பிரச்சினை

சிவசுப்ரமணியை கொலை செய்ய வந்த விவகாரமும் கள்ளக்காதல் பிரச்சினைதானாம். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தன் மனைவியை விவாகரத்து செய்வது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது. இப்போது ஸ்ரீரங்கத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திகா தேவி, தனது இந்த முடிவுக்குக் காரணம் இன்ஸ்பெக்டர்தான் என்று கூறியுள்ளார்.

English summary
A woman in Trichy attempted for suicide charging an Inspector who threatened her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X