• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"நாங்க 2 பேர் இருந்தும்.. இன்னொருவருடனும் உறவு" டெய்லர் ராணியை கத்தரிகோலால் குத்தி..ஷாக் வாக்குமூலம்

|

செங்கல்பட்டு: "நாங்க 2 பேர் இருக்கோமே.. இன்னொருத்தன் எதுக்கு" என்று கேட்டு டெய்லர் ராணியை கத்தரிக்கோலாலேயே குத்தி கொன்றுவிட்டார் கள்ளக்காதலன்!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் யசோதா ராணி.. 42 வயதாகிறது.. கல்யாணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 woman killed by her illegal boy friend near chennai

புதுபெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் ஒரு தையல் கடையை சொந்தமாக வைத்து நடத்தி வந்தார் ராணி.. அப்போதுதான் செல்வக்குமார் என்பவர் பழக்கமானார்.. தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்.. அவருக்கு 45 வயதாகிறது.. இருவருக்கும் லவ் வந்துவிட்டது. தையல் கடைக்கு வந்து செல்லும்போதெல்லாம் இந்த கள்ளக்காதல் வலுவாகி வந்துள்ளது.

வழக்கம்போல் நேற்றும் ராணியின் கடையில் உட்கார்ந்து செல்வக்குமார் பேசி கொண்டிருந்தார்.. அப்போது திடீரென 2 பேரும் சண்டை போட்டு கொண்டனர்.. எதற்காக சண்டை என்று தெரியவில்லை.. வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து ராணியின் கழுத்தில் குத்திவிட்டார்.. ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார் ராணி.. உடனே செல்வக்குமார் தன்னுடைய பைக் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் பைக்கில் செல்வகுமார் செல்வது பதிவாகி இருந்தது.. பெருங்களத்தூர் ரோஜா தோட்டம் அருகே செல்வக்குமாரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.. அதன் பக்கத்தில் யாருமே இல்லை.

அனாதையாக கிடந்த அந்த பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அந்த பகுதியிலேயேதான் செல்வகுமார் மறைந்திருக்க வேண்டும் என்று கருதி வலைவீசி தேடினர்.. அங்கிருந்த ஒரு பிரிட்ஜ்-க்கு அடியில் உட்கார்ந்திருந்தார் செல்வக்குமார்.. அவரை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதாவது வெறும் நாலரை மணி நேரத்தில் குற்றவாளியை நம் போலீசார் கைது செய்தனர். அப்போது செல்வகுமார் போலீசில் சொன்னதாவது:

"திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.. 2008-ல் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. என் மனைவி ஒரு காலேஜில் புரொபசராக வேலை பார்க்கிறார்.. நாங்க ஏற்கனவே குரோம்பேட்டையில் இருந்தோம்.. அங்கேதான் ராணியின் வீடும் இருந்தது.. அப்போதிருந்தே எங்களுக்கு தொடர்பு இருக்கு.. இந்த விஷயம் தெரிந்து என் மனைவி என்னை டைவர்ஸ் பண்ணிட்டு போய்ட்டாள்.

ஜெ. அன்பழகன்.. நிறைய பாடங்கள்.. படிப்பினைகள்.. கவனம் தேவை தலைவர்களே.. மக்களுக்கு நீங்கள் முக்கியம்

எனக்கு இன்னும் வசதியா போய்விடவும், ராணியுடன் உறவு நீடித்து வந்தது. ஆனால் கொஞ்ச நாளா, ராணி வேறு ஒருத்தருடன் அடிக்கடி போனில் பேசி வந்தாள்.. இதை நான் பல முறை கண்டித்தும் கேட்கல.. இன்னொருத்தருடன் எப்படி பேசலாம் என்று கண்டித்தேன்.. ஆனால், அந்த நபர் ராணியின் மகள் பிறந்த நாளுக்கு கேக் ஆர்டர் தந்தான்.. இது எனக்கு இன்னும் ஆத்திரம் தந்தது.. அது சம்பந்தமா சண்டை வரவும், கோபத்தில் கத்திரிகோலால் குத்திவிட்டேன்" என்றார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
woman killed by her illegal boy friend near chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X