For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அடங்காத" சிவகாமி... கள்ளக்காதல்.. கஞ்சா கடத்தல்.. கடைசியில் கொலை.. இப்ப ஜெயில்.. மிரண்ட திருத்தணி

திருத்தணி அருகே பெண்ணை கொன்ற பெண் உட்பட பேர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

திருத்தணி: 36 வயது சிவகாமிக்கு கள்ளக்காதல் & கஞ்சா & கடத்தல் & ஜெயில் என்பதெல்லாம் சர்வசாதாரணம்.. இப்போது அசால்ட்டாக ஒரு கொலையும் செய்துவிட்டார்.

திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.. இவரது மனைவி நவநீதியம்மாள்.. 55 வயதாகிறது.. இவர் சிவகாமி என்பவருக்கு அடிக்கடி பணம் கடனாக தருவாராம்.. சிவகாமிக்கு 36 வயதாகிறது.

woman murder near tirutani and police arrested two

கடந்த 28ம் தேதி நவநீதியம்மாள், சிவகாமியிடம் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி வருவதாக கூறி சென்றார்... ஆனால் அதற்கு பிறகு வீட்டிற்கு வரவேயில்லை.. சொந்தக்காரர்கள் அவரை எங்கெங்கோ தேடி அலைந்தனர்.. ஆனால், நவநீதியம்மாளை கண்டுபிடிக்கவே முடியவில்லை.. அதனால், திருத்தணி போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி, பொன்பாடி மேட்டு காலனி அருகே உள்ள தேக்கு தோப்பில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. அதனால், விரைந்து சென்ற போலீசார் சடலத்தை பார்வையிட்டபோதுதான் அது காணாமல் போன நவநீதியம்மாள் என்பது தெரியவந்தது. மர்மமான முறையில் அவர் இறந்துள்ளார்.. அவர் அணிந்திருந்த கம்மல், தாலி, செயின், மூக்குத்தி என மொத்தம் 10 பவுன்கள் மாயமாகி இருந்தது.

இதையடுத்து சடலத்தை மீட்டு போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. பின்னர், இதுகுறித்து விசாரிப்பதற்காக சிவகாமி வீட்டிற்கு போலீசார் சென்றனர்... அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது... இதனால் சிவகாமி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அதன்படி விசாரணையை திசை திருப்பியதில் பழைய சம்பவம் குறித்து தெரியவந்தது.

சிவகாமிக்கு, சுரேஷ் என்ற இளைஞருடன் தொடர்பு இருந்துள்ளது.. சுரேஷ் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையை சேர்ந்தவராம்... சுரேஷுடன் சேர்ந்து சிவகாசி இவ்வளவு நாளாக சாராயம் கடத்தி வந்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, கடந்த 28ம் தேதி இரவு, அவர் வீட்டில் சென்று தங்கியிருக்கிறார்.. வீட்டின் அருகே, டிராக்டரில், 6000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கியும் வைத்திருந்ததால், மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பிறகு சில நாட்களுக்கு முன்புதான் சிவகாமி ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்புஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு - தீபக் வழக்கு ஹைகோர்ட் ஒத்திவைப்பு

இந்த சமயத்தில்தான், சிவகாமியிடம் நவநீதியம்மாள் பணத்தை திருப்பி கேட்டு வந்துள்ளார்.. ஆனால் அவரால் தர முடியவில்லை.. அதனால், சுரேஷூடன் சேர்ந்து நவநீதியம்மாளின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.. 10 சவரன் நகையையும் பறித்து கொண்டு, சடலத்தை தேக்கு தோப்பில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.. இப்போது 2 பேரையும் போலீசார் மறுபடியும் கைது செய்துள்ளது.

English summary
woman murder near tirutani and police arrested two
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X