For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருடியதை தட்டி கேட்ட நீல்கிரீஸ் உரிமையாளரை அடித்து உதைத்த பெண் கான்ஸ்டபிள் கணவர்..சென்னையில் திடுக்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சாக்லேட் திருடி சிக்கிக்கொண்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட்- வீடியோ

    சென்னை: பெண் கான்ஸ்டபிளின் கணவர் மகன் ஆகியோர் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை அடித்து உதைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை எழும்பூரிலுள்ள நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் நந்தினி என்ற கான்ஸ்டபிள் 100 ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்டுகள் உள்ளிட்டவற்றை திருடியது சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து அவரிடமிருந்து போராடி அந்த பொருட்களை மீட்டெடுத்த கடை ஊழியர்கள், திருடியதை ஒப்புக்கொண்டு கையெழுத்திட கோரினர். அவரும் கையெழுத்திட்டு கிளம்பி சென்றார்.

    Woman police constable husband beaten the owner of Nilgiris in Chennai

    ஆனால், வீட்டுக்கு சென்று தனது கணவர் மற்றும் மகனிடம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி அழுதுள்ளார். நந்தினியின் கணவன், மகன் உள்ளிட்ட மூவர் கடைக்கு வந்து கடை உரிமையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாாகியுள்ளன. கடை பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில், நந்தினி கணவன், அசிங்க அசிங்கமாக பேசி என்னையும் அடிக்க வந்தார். நான் எப்படியோ தப்பிவிட்டேன். எங்கள் உரிமையாளர் அங்கு வந்தபோது, அவரை பேசவே விடாமல் போட்டு அடித்துவிட்டனர்.

    Woman police constable husband beaten the owner of Nilgiris in Chennai

    அவரை கீழே தள்ளி விட்டு ரத்தம் வர மாதிரி அடிச்சிவிட்டனர் என்றார்.

    காவல் துறையில் பலர் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் நிலையில் காவலர் நந்தினி அரங்கேற்றியுள்ள திருட்டு சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனிடையே நந்தினியை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட அவர் கணவர் உள்ளிட்டோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    English summary
    The woman constable son and husband were beaten the owner of Nilgiris Super Market in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X