For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண மோசடி சர்ச்சையில் ஈசா யோகா மையம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: லிங்க பைரவ சிலைக்காக ரூ.4.50 லட்சம் பெற்றுக் கொண்டு உடைந்த சிலையை தந்து ஏமாற்றியதாக கோவையில் உள்ள ஈசா யோகா மையம் மீது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். போலீஸ் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து பணத்தை ஒப்படைத்தது ஈசா யோகாமையம். இதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்றார் ஸ்வீடன் பெண்.

ஸ்வீடன், பாகர்மூசன் ஸ்டாக் ஹோமைச் சேர்ந்தவர் ஜெயா பாலு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர், கடந்த 16-ம் தேதி ஸ்வீடனிலிருந்து இந்தியா வந்துள்ளார்.

Woman withdraws complaint against foundation

டிசம்பர் 23ஆம் தேதி, கோவை பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற லிங்க பைரவ யந்திர விழாவில் கலந்து கொண்டார். அப்போது, யோக மையத்தில் 160 கிலோ லிங்க பைரவ சிலை வேண்டி, கோயில் நிர்வாகத்திடம் ரூ.4.50 லட்சத்தை வெளிநாட்டு வங்கி கிரெடிட் கார்டு மூலமாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பணத்தைப் பெற்றுக்கொண்ட ஈஷா யோகா மையத்தினர், சேதமடைந்த சிலையைக் கொடுத்தார்களாம். இது குறித்து புகார் தெரிவித்த ஜெயா பாலு, இந்த சிலையை மாற்றி வேறு சிலை கேட்டுள்ளார். ஆனால், வேறு சிலையை மாற்றித் தருவதற்கு மேலும் ரூ.50 ஆயிரம் கேட்டார்களாம். இதையடுத்து, பணத்தை அவர் திருப்பித் தரக் கேட்டுள்ளார்.

பணத்தைத் தர மறுத்ததால், டெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தில் பண மோசடி தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை மூலமாக, கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு வந்தது.

ஜெயா பாலு அளித்த புகாரின் அடிப்படையில் ஆலாந்துறை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ஈசா யோகா மையத்தின் நிர்வாகி ஒருவர் ஜெயா பாலுவின் பணத்தை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

பணத்தை திரும்ப பெற்றுக்கொண்ட ஜெயா பாலு, ஈஷா யோகா மையம் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றார்.

English summary
The Alandurai police registered a case against Isha Foundation, Poondi, on Thursday based on a complaint lodged by a Swedish national alleging that she was cheated by the foundation to the tune of Rs. 4.5 lakh. The case was registered under section 420 (cheating) of the Indian Penal Code.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X