• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவன் என்னைக் கேட்டான்.. நான் அவனைக் கேட்டேன் என்றெல்லாம் பெண்கள் இருக்கக் கூடாது!

By Lakshmi Priya
|
  Exclusive: அவன் என்னைக் கேட்டான், நான் அவனைக் கேட்டேன் என்றெல்லாம் இருக்கக் கூடாது- டாக்டர் அபிலாஷா

  சென்னை: பெண்கள்தான் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். அவன் என்னைக் கேட்டான். நான் அவனைக் கேட்டேன் என்றெல்லாம் இருக்கக் கூடாது என்று உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா பெண்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

  பெருகி வரும் கள்ளக்காதல், அதுதொடர்பான குற்றச் செயல்கள் குறித்து டாக்டர் அபிலாஷாவிடம் பேசி வருகிறோம். இந்தத் தொடர் கட்டுரையின்போது சமூக ரீதியான பாதிப்புகள், எந்த காரணத்தால் இதுபோன்ற உடலியல் ஈர்ப்புகள் அதிகரிக்கின்றன என்பது குறித்து டாக்டல் அபிலாஷா நிறைய விளக்கியுள்ளார்.

   Wome should be more alert with men

  இந்த குறும் தொடரின் இறுதிப் பகுதி இது. இதில் பெண்களுக்கு சில அறிவுரைகளை டாக்டர் அபிலாஷா கொடுத்துள்ளார். நிறைவுப் பகுதியிலிருந்து:

   Wome should be more alert with men

  பெண்கள் தங்களை எப்படி காத்து கொள்ள வேண்டும்?

  பெண்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். நமது உடலமைப்பு சமுதாய அமைப்பு, ஒரு தாயாக எதிர்பார்ப்புகள் இதெல்லாம் அதிகம் எனும் போது ஆணும் பெண்ணும் சமம், அவன் என்னை கேட்டான், நான் அவனை கேட்டேன் என சொல்ல முடியாது. இந்த இடத்தில் யாராவது சுதாரிக்க வேண்டும். என்ன பேசுறீங்க நீங்க, எனக்கென குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் உள்ளனர் என்று கூறியிருந்தால் இவ்வளவு இழப்புகளும் பிரச்சினைகளும் வந்திருக்காது. அவனும் வேறு பெண்ணை தேடி சென்றிருப்பான். ஒரு வாட்ஸ் ஆப், பேஸ்புக் இருந்தால் போதும் பெண்ணை ஈசியாக கேட்டுவிட்டு இரண்டு நாட்களுக்குள் அந்த தகவலை அழித்து விடுவான். பெண்களும் இதை கணவனிடம் சொன்னால் நீ பேஸ்புக்கில் இருப்பதால்தானே அவன் கேட்கிறான். நீ முதலில் அதிலிருந்து வெளியே வா என்று பெண்ணைதான் கண்டிப்பார்கள், இதற்கு பயந்து கொண்டே சில பெண்கள் இதுபோன்ற விஷயங்களை வெளியே சொல்வதில்லை. இன்று சோஷியல் மீடியாக்களில் ஏராளமான புரபோசல்கள் போய் கொண்டுதான் இருக்கிறது. அதில் சிலது கிளிக் ஆகிறது.

   Wome should be more alert with men

  இதுபோன்ற நல்ல குடும்பத்தை கெடுப்பதற்கு பதில் இந்த ஆண்கள் தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்ள ஏன் விலைமாதுகளை நாடுவதில்லை?

  ஏனெனில் இது என்னோட பவர் என்று ஆண்கள் கருதுகிறார்கள். அந்த பெண்ணை அடக்கி ஆள நினைக்கிறார்கள். ஒரு பெண்ணை பேச்சு திறமையையோ அல்லது என்னுடைய அழகையோ கவர்ச்சியையோ வைத்து மயக்குகிறார்கள். ஆண், அந்த பெண்ணை தன்னுடையவளாக ஆக்குகிறான். அது அவனுடைய சாதனையாக கருதுகிறான். விலைமாதுக்களிடம் போவது என்பதில் இவர்களுக்கு சுவாரசியம் இல்லை. அது ரெடிலி அவெய்லபிள். கள்ளக்காதலில் வேட்டையாடி நானே எடுத்துக் கொள்வது போல். எல்லா ஆண்களையும் தவறாக கூற கூடாது. என்னிடம் கவுன்சலிங் வரும் தம்பதியில் அந்த பெண் கணவனை வேண்டாம் என்று கூலாக சொல்வார். அந்த கணவன் என்னாதான் தங்க தாம்பளத்தில் தாங்கியிருந்தாலும் எனக்கு அவனை பிடிக்கவில்லை என்பார்கள். ஆண், பெண் என்பதை மீறி தனி மனித ஒழுக்கம். கொலை செய்வதே தவறு, இதில் தன்னை நம்பியிருக்கும் குழந்தைகளை கொல்வது என்பது மாபாதகம்.

  கள்ளக்காதலுக்காக கொலை செய்யும் குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

  இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்து ஒன்றும் ஆகப்போவதில்லை. இந்த பெண் இதையே பொழுது போக்காக நினைத்து செய்யபோவதில்லை. இந்த பெண் ரிலீசாகி வெளியே வந்துவிட்டால் அடுத்த ஆண்களிடம் செல்லமாட்டார். ஏனெனில் நேரடி பாதிப்பு தனக்கே என்பதால். இதே தஷ்வந்த் விவகாரம், அயனாவரம் லிப்ட் ஆபரேட்டர் விவகாரங்களில் பாதிப்பு அடுத்தவர்களுக்குத்தான். அவர்களை வெளியே விட்டால் அடுத்த குழந்தையை சீரழிப்பர். ஆனால் கள்ளக்காதலில் அது போல் இல்லை. இவர்களுக்கு சட்டங்களை கடினமாக்கலாம். ஆனால் தூக்கு தண்டனை கிடைக்குமா என தெரியவில்லை. சில இடங்களில் இதுபோன்ற கள்ளக்காதல்களில் குழந்தைகள் உயிரோடு இருக்கும். அந்த சம்பவங்களில் அந்த பெண்ணை தூக்கிலிட்டு குழந்தைகளை நிர்கதியாக நிற்க வைக்க முடியாது.

  இதுபோல் குழந்தைகளை கொல்வதற்கு உளவியல் ரீதியாக என்ன பெயர்?

  குழந்தைகளை கொலைவதில் 4 வகைகள் உள்ளன. இதுபோன்ற கொலைக்கு சிலிசைட் என்பார்கள். இதில் முதல் வகை ஒருவருக்கு நோய் வந்து சாகும் நிலையில் இருக்கும்போது பிள்ளைகளை கொலை செய்வது, குழந்தைகளை வெறுப்பேற்றி துன்புறுத்தி ஓரங்கட்டி சரியாக கவனிக்காமல் கொல்வது என்பது 2-ஆவது வகை. புருஷனையோ பொண்டாட்டியையோ பிடிக்காது அவருடைய பிரதிபலிப்பாக குழந்தைகள் இருப்பதால் அவர்களை கொல்வது 3-ஆவது வகை. மூடநம்பிக்கைகாக குழந்தைகளை பலிக் கொடுப்பது 4 ஆவது வகை. இதுபோன்ற சிலிசைட்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன. இதை நான் நியாயப்படுத்தவில்லை. நமது ஊர் தாய்மைக்கே பெயர் பெற்றதாகும். யார் வீட்டு பிள்ளையையோ தன் சொந்த பிள்ளையாக பார்க்கும் தாய்மார்களுக்கு மத்தியில் தனது சொந்த குழந்தைகளை கொலை செய்வது தவறுதான். குழந்தைகள் மீது ஈர்ப்பு இல்லை. இன்றைய வீடுகளில் பிரிட்ஜ் ,வாஷிங் மெசின் போல்தான் குழந்தைகளும் ஒரு பொருளாக உள்ளனர். ஒரு குழந்தை படித்து மார்க் எடுக்கும் பெரிதானால் சம்பாதித்து கொடுக்கும் இப்படிதான் குழந்தைகள் உள்ளனரே தவிர, அந்த குழந்தைகளுடன் உட்கார்ந்து விளையாடுவது, நேரம் செலவிடுவது இல்லை. எனவே குழந்தைகள் மீது ஒரு அட்டாச்மென்ட் இருந்தால் மட்டும் முகத்தை பார்க்கும் போது மனசு துடிக்கும். அந்த குழந்தையின் முகத்தை அபிராமி பார்த்திருந்தால் அய்யோ அது என் குழந்தை, என் உடம்பில் பாதி அது என்ற உணர்வு இருந்திருக்கும். இதுதோன்றாததற்கு காரணம் ஒரு பொருள் என்கிட்டயும் இருக்கு, இது இல்லாவிட்டால் என்னை எல்லாரும் மலடி என்பார்கள். அதனால் எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார்கள். இப்படியில்லாமல் அந்த குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே ஒரு அன்னியோன்யம் வர வேண்டும். படிப்பு, எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி இதையெல்லாம் தாண்டி சுத்தமான அன்பை தாயால் மட்டுமே கொடுக்க முடியும். அப்படி கொடுக்கும் போது அந்த குழந்தையும் எதிர்காலத்தில் நல்ல குழந்தையாக உருவாகும். இந்த தாய்க்கும் அந்த குழந்தை கிட்ட ஒரு நல்ல உறவு இருக்கும்.

  கள்ளகாதலில் ஈடுபடுவோருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?

  கல்யாணம் செய்து கொண்டால் உங்களுக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது. குழந்தை பிறந்து விட்டால் அந்த பொறுப்பு இரட்டிப்பாகிறது. இந்த பொறுப்புகளை உணராவிட்டால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர், குழந்தை பெற்றுக் கொள்ளாதீர். ஆனால் இதை செய்துவிட்டால் அந்த கணவனுக்கு நியாயமாக மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இது தனிமனிதனை பாதிப்பதோடு இல்லாமல் ஒரு சமுதாயத்தையே பாதிக்கிறது. இது மற்ற குடும்பத்து பெண்களையும் பாதிக்கிறது. நீ ஸ்கூட்டியெல்லாம் ஓட்ட வேண்டாம், வேலைக்கு செல்ல வேண்டாம் என மனைவிகளை ஒடுக்க நினைப்பர். யாரோ எங்கேயோ செய்த தவறுக்கு யாரோ பாதிக்கப்படுவர். எல்லாருக்கும் இச்சைகள் இருக்கிறது. எல்லாரும் பசிக்கிறது. அதற்காக நாம் நேராக ஹோட்டலுக்கு சென்று திருட்டுத்தனமாக உண்பதில்லை. பசியை அடக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நமது படிப்பறிவு, குடும்ப வளர்ப்பு, நமக்கென இருக்கும் தனிமனித ஒழுக்கம். செல்ப் கன்ட்ரோல் என்பது மிகவும் முக்கியம். இது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை முக்கியமான விஷயம். தன்மானம் இருந்தால் யாரும் இதுபோன்ற அசிங்கமான தவறுகளை செய்ய மாட்டார்கள். தன்மானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் சுய கட்டுப்பாட்டுக்கு வழி வகுக்கும். தவறு செய்தால் தப்பலாம் என நினைக்க வேண்டாம். உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். கொலை செய்து விட்டு 10 ஆண்டுகள் தலைமறைவாக இருப்பவர்கள் கூட 11 ஆவது ஆண்டில் சிக்குவர் என்றார் அவர்.

  [பகுதி: 1, 2, 3, 4]

   
   
   
  English summary
  Dr Abilasha says that Women are more vulnerable to be exploited. So they should be very alert particularly with men.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more