For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடி வயிற்றில் பாறாங்கல்லை இறக்கினால் எப்படி அமைச்சரே?!

Google Oneindia Tamil News

Recommended Video

    அடி வயிற்றில் பாறாங்கல்லை இறக்கினால் எப்படி அமைச்சரே?- வீடியோ

    சென்னை: ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு கிடையாது என்று தமிழக அமைச்சர் காமராஜ் கூறியிருப்பது மக்களின் அடிவயிற்றில் பாறாங்கல்லை இறக்கியது போல உள்ளது.

    இதுகுறித்து இல்லத்தரசிகள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், அன்றாடங்காய்ச்சிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்படி மொத்தமாக இல்லை என்று கூறினால் எப்படி என்ற கவலையில் அவர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நமது வாசகர் தனிஷ்ஸ்ரீ எழுதியுள்ள ஒரு ஆதங்கக் கட்டுரை:

    அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில்

    அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில்

    அமைச்சர் காமராஜ் அவர்களின் அறிவிப்பு அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் இன்னுமொரு பாறாங்கல்லை போட்டிருக்கிறது. ஆம்! உளுந்தை பற்றி அறிக்கை விட்டு இந்த ரேஷன் கடைகளின் மூடு விழாவுக்கான முதல் அறிக்கையை மறைமுகமாக செய்துள்ளார்.

    இந்தக் காமராஜர் இப்படிச் செய்கிறார்

    இந்தக் காமராஜர் இப்படிச் செய்கிறார்

    தமிழ்நாட்டு மக்களின் கல்வி தரத்தை உயர்த்த, மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கர்மவீரர் காமராஜர் சத்துணவு திட்டத்தை வகுத்தார். ஆனால் நம் அமைச்சர் காமராஜோ, இருக்கிற திட்டத்திலிருந்து உளுத்தம் பருப்பை எடுத்து நாட்டின் கஜானாவுக்கு நன்மைகளை வழங்கியுள்ளார்.

    ராஜு கேட்டாலும் கேட்பார்

    ராஜு கேட்டாலும் கேட்பார்

    ஒரு வேளை இதைப் பற்றி அமைச்சர் செல்லூ ராஜூவிடம் கேட்டால், "உளுந்தை எடுக்கிறது ஒரு தப்பா?. அன்று அம்மாவே உளுந்து நல்ல பொருள் இல்லை" என்று கூறினாலும் கூறுவார்.

    ஜிஎஸ்டி என்றால் கிஸ்தி

    ஜிஎஸ்டி என்றால் கிஸ்தி

    GST என்று தமிழில் கூகிள் டிரான்ஸ்லேட் -டில் எழுதினால் அது கிஸ்தி என்று காட்டுகிறது. இதைவிட வேறு என்ன வேண்டும். இது மட்டும் நம் மத்திய அமைச்சர்களுக்கு தெரிந்தால் மெர்சல் படத்திற்கு கொடுத்த விளம்பரத்தை நம் எல்லையில் இருக்கும் கிராமங்களுக்கும் கொண்டு செல்வர். கூகுளை குடிசைக்குள்ளும் கொண்டு செல்வர்.

    குடிசைக்குள்ளிருந்து விரட்டப்படும் இட்லி

    குடிசைக்குள்ளிருந்து விரட்டப்படும் இட்லி

    எதற்கு சொல்கிறேன் என்றால், இப்படி GST பயத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த அன்றாடங்காய்ச்சிகளின் குடிசைகளில், இட்லி என்ற உணவு அறவே வராததாக ஆக்கிவிட்டார்கள். கேட்டால் கொடுப்போம் என்கிறார். எதை? என்பதை அமைச்சரைதான் கேட்க வேண்டும். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டிய அமைச்சர், அதிரி புதிரியாக சிலவற்றை செய்து ஊடகங்களின் உயர்ந்த மின் வெளிச்சத்தில் மின்னுகிறார்.

    தட்டளவாவது உயர வேண்டாமா

    தட்டளவாவது உயர வேண்டாமா

    ஏற்கனவே இந்த உலகமயமாக்கலின் உச்சத்தில் தவித்து கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, அவர்களின் தட்டளவாவது உயர வேண்டாமா ??? ஏதாவது செய்து சரிந்த பொருட்களை சரி செய்ய மாட்டாரோ என்ற ஏக்க பெருமூச்சுடன் நாம்.

    English summary
    Women in Tamil Nadu are worried over the minister Kamaraj's announcement on Black gram sales in PDS shops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X