For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்தினி தெய்வங்கள் பாத்திமா பாபு, லதா: நாஞ்சில் சம்பத்தின் நாரச விமர்சனத்தால் கடும் சர்ச்சை

ஓபிஎஸ் அணி பாத்திமாபாபு மற்றும் நடிகை லதாவை 'பத்தினி தெய்வங்கள்' என மறைமுகமாக இழிவுபடுத்தியிருக்கும் சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியை ஆதரிக்கும் செய்தி வாசிப்பாளர் பாத்திமாபு மற்றும் நடிகை லதா ஆகியோரை 'பத்தினி தெய்வங்கள்' என நாரசமாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளது பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் மேடைகளில் மூன்றாந்தர பேச்சுகள் தவிர்க்கப்படுவது குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்கிற ரீதியில் அரசியல்வாதிகள் தங்களது பயணத்தை தொடருகின்றனர்.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

அதிமுக சசிகலா அணி ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் சம்பத் கூறியுள்ளதாவது:

தப்பாட்டம்

தப்பாட்டம்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் திட்டம் கழக ஆட்சியை கவிழ்ப்பது அல்லது மு.க.ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது அதுவும் முடியாவிட்டால் தேர்தலுக்கு வழிகாணுவது; இந்த சதி திட்டத்திற்கு சப்பைக்கட்டு கட்ட இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார் தப்பாட்டம் ஆடுகிறார்.

பத்தினி தெய்வங்கள்

பத்தினி தெய்வங்கள்

பாத்திமா பாபு, லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்து விட்டது. ஆனால் பார்த்த முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து அரசு வீட்டில் இருந்துகொண்டு அரசியலில் காணாமல் போன ஆட்களையும் காலாவதியான தலைவர்களையும் சில தேவையற்ற வீட்டை கூட்டி வைத்துக் கொண்டு கும்மாளம் போடுகிறார்.

மானம், மரியாதை...

மானம், மரியாதை...

பன்னீர் செல்வத்துக்கு மானமும் மரியாதையும் இருக்குமானால் அரசு வீட்டை காலி செய்து விட்டு அரசைப் பற்றி பேச வேண்டும். அரசு வீட்டில் இருந்துக் கொண்டே ஆபத்தான விளையாட்டை விளையாடுவது ஆரோக்கியமானது அல்ல. இவ்வாறு நாஞ்சில் சம்பத் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

நாஞ்சில் சம்பத்தின் இத்தகைய நாரசமான விமர்சனங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களிடையே இத்தகைய பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Women Groups have condemned the ADMK Sasikala Team supporter Nanjil Sampath's comments against Team OPS's Fathima Babu and Actress Latha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X