For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெரினாவில் தடியடி... பெண்களின் உடைகளை கிழித்த போலீசார்... மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது போலீசார் இன்று காலை அதிரடியாக தடியடி நடத்தினர். இதில் பல பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை போலீசார் கிழித்ததாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்ச க்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முதலே போலீசார் குவிக்கப்பட்டு வந்தனர்.

women's dresses torn by police in Chennai Marina

இந்நிலையில் இன்று காலை ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறியோடினர்.

அப்போது பல பெண்களின் ஆடைகளை போலீசார் கிழித்ததாக கூறப்படுகிறது. தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கைவைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Police did lahti charge in Chennai Marina on protesters. Police used batons on women. The students have accuses that many women's dresses torn by police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X