டாஸ்மாக் கடையை மூடு.. அதிகாரிகளுடன் ஆக்ரோஷம் காட்டிய பெண்.. நெல்லையில் பரபரப்பு
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் அதிகாரிகளுடன் பெண் ஆவேசமாக பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் பெண் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே பனவடலிசத்திரம் பகுதியில் சாயமலை என்ற இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகே குடிநீர் தொட்டி மற்றும் ரேஷன் கடையும் இருக்கிறது.

இந்நிலையில், தொட்டி தண்ணீர் பிடிக்க வரும் பெண்களை குடிமகன்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சாயமலை டாஸ்மாக் கடையை மூட கோரி எதிர்ப்பு தெரிவித்தனர். கை குழந்தையுடன் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தை பெண்கள் துவங்கினர். மாலை 5 மணிக்கு துவங்கிய போராட்டம் இரவு 10 மணி வரை நீண்டது. இதனால் விரைந்து வந்த சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன், திருவேங்கடம் தாசில்தார் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் தர்ணா செய்த பெண்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
அதன்படி, திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது பெண் ஒருவர் சாயமலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவிட்டால் தீக்குளிப்பேன் என அதிகாரிகளிடம் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை சமாதானப்படுத்திய நெல்லை மாவட்ட ஐயப்பன், தாசில்தார் ராசு பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை விரைவில் மாற்றப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் இரவில் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications