For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் சாம்பார் வெங்காயம்- கிலோ ரூ. 160

சின்ன வெங்காயம் சில்லறை விலையில் ரூ.160 வரையிலும் மொத்த விலையில் ரூ.125 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை விலையில் கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக சமையலில் சின்ன வெங்காயத்திற்கு தனித்துவமான இடமுண்டு. அதன் சுவையே அலாதிதான். விலை உயர்வினால் சின்ன வெங்காயம் உரிக்காமலேயே கண்களில் தண்ணீர் வருகிறது.

பருவமழை கடந்த ஆண்டு பொய்த்துப்போனதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. நீர் நிலைகள் வறண்டு போனதால் விவசாயமும் பொய்த்துப்போனது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, எந்த மாவட்டத்தில் இருந்தும் சின்ன வெங்காய வரத்து இல்லை இதனால் சாம்பார், தொக்கு உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

கர்நாடகாவில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 125 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை விலையில் கால் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சந்தைகளில் வரத்து குறைவு

சந்தைகளில் வரத்து குறைவு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வெங்காய சந்தையில், சந்தை நாட்களின்போது 4 ஆயிரம் மூட்டைகள் சின்னவெங்காயம் விற்பனைக்கு வரும். வறட்சி காரணமாக, தற்போது 800 மூட்டைகளே வருகின்றன. இவையும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.

கிலோ ரூ. 160

கிலோ ரூ. 160

மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.125க்கு விற்கப்படும் சின்ன வெங்காயம், வெளி மார்க்கெட்டில் மக்கள் வாங்கும்போது கிலோ ரூ.160 விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தை காண்பதே அரிதாக உள்ளது.

ஆந்திராவில் அறுவடை

ஆந்திராவில் அறுவடை

ஆந்திர மாநிலத்தில் வெங்காய அறுவடை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஆந்திர வெங்காயம் வர ஒரு மாதம் வரை ஆகும் என்பதால், தற்போதைய நிலையில் கர்நாடகா வெங்காய வரத்து குறையும்பட்சத்தில் விலை மேலும் அதிகரித்து ரூ.175 வரை செல்ல வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

விளைச்சல் இல்லை

விளைச்சல் இல்லை

தமிழகத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் நடவு செய்துள்ளனர். பிற மாவட்டங்களில் மழை இல்லாததால் வெங்காயம் பயிரிடப்படவில்லை. மழை பெய்து தமிழக வெங்காய வரத்து ஏற்பட்டால்தான் விலை கணிசமாகக் குறையும்.

கை கொடுக்கும் பெரிய வெங்காயம்

கை கொடுக்கும் பெரிய வெங்காயம்

பல்லாரி வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் விலை அதிகமாக உள்ளதால் சமையலுக்கு அதிக அளவில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி வெங்காயத்தையே வாங்கி பயன்படுத்துகின்றனர்.

English summary
Small onion, which usually costs around Rs.30 a kg, was priced at a steep Rs.160 a kg in various vegetable shops in TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X