For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூன் 14-இல் உலக ரத்ததான தினம்... ரத்தத்தை கொடுப்போம்; உயிரை காப்போம் முன்வாருங்கள் ப்ளீஸ்!

ஜூன் 14-ஆம் தேதி உலக ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ரத்தத்தை கொடுப்போம்; உயிரை காப்போம்-வீடியோ

    சென்னை: ரத்ததானமானது, நம்மைப் போன்றவர்கள் விபத்திலோ, அறுவை சிகிச்சையின் போதோ, சில சமயங்களில் பிரசவம் அடைந்த தாய்மாருக்கு அவசர சிகிச்சையின் போது அல்லது வேறு காரணங்களினாலோ உடலிலிருந்து இரத்த இழப்பு நேரிடும். அச்சமயத்தில் இரத்த தானம் செய்பவர்களாகிய நாம் உதவும் மனப்பான்மையோடு பயமில்லாமல் ஒருவரின் உயிரைக் காக்க மனமுன்வந்து செய்யும் மேன்மையான தொண்டே இரத்த தானம்.

    உலகில் ஒட்டுமொத்தமாக 6.8 மில்லியன் மக்கள் வருடம் தோறும் இரத்த தானம் செய்கின்றனர். இரத்த தானம் செய்பவர்களைக் கொண்டு உலகமெங்கும் அனைத்து பகுதிகளிலிருக்கும் மக்களிடையே இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வையும், இரத்த பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும். தன்னார்வத்தோடு இரத்த தானம் செய்ய முன் வருதலும். தரமான பாதுகாப்பான இரத்த தட்டுணுக்கல் மாற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஜூன் 14 தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஆண்டுக்கு எத்தனை முறை

    ஆண்டுக்கு எத்தனை முறை

    கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் உடலிலுள்ள இரத்தப் பிரிவுகளைக் கண்டுப்பிடித்தவர். இவர் பிறந்த நாளினை சிறப்பிக்கும் விதமாக, உலக சுகதார நிறுவனமான WHO இந்த நாளை விமர்சையாகக் கொண்டாடுகிறது. இரத்த குறுதியானது 4 பிரிவினை கொண்டது. A, B, AB, O. O- negative இரத்தப் பிரிவானது எளிதில் எல்லோருக்கும் இரத்த தானம் செய்யக் கூடிய பிரிவினை சேர்ந்து. AB இரத்தப் பிரிவினையுடைய மனிதரால் எல்லா இரத்த பிரிவினையுடைய மனிதர்களிடமிருந்தும் இரத்தினை பெற முடியும். ஒருவருடைய உடலில் நான்கு முதல் ஐந்து லிட்டர்கள் இரத்த்ம் உள்ளது. இரத்த தானம் செய்யும் ஆண்கள் வருடத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் வருடத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் கொடுக்கலாம். இரத்தமானது குறிப்பிட்ட காலளவில் மட்டுமே தேக்கி வைக்க முடியும். இதன் காரணமாகவே இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தை தேக்கி வைக்கின்றனர்.

     ஊசிப் போடும் போது

    ஊசிப் போடும் போது

    பலவித காரணங்களால் நீங்கள் இரத்த தானம் செய்ய தயங்குவீர்கள். ஊசிப் போடும் போது சிறிய எறும்பு கடிதாற் போலதான் இருக்கும். இரத்த தானமானது 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். அதுவரை பொறுமையாக இருந்து இரத்த தானம் செய்வதால், இரத்தம் தேவைப்படுகின்றவரின் உயிரினைக் காப்பாற்ற முடியும் என்பதை மறவாதீர்கள். இரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமாகிவிடும் என்ற தவறான நம்பிக்கையை முற்றிலுமாக மறந்து விடுங்கள்.

    ஆராய்ந்த பிறகே தானம்

    ஆராய்ந்த பிறகே தானம்

    ஏன்னென்றால் முதலில் மருத்துவர் உங்களை முழுவதுமாகப் பரிசோதித்த பின்பு, உங்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தப் பின்பே, உங்களின் அனுமதிப் பெற்றே இரத்தத்தை எடுத்துக் கொள்வர். இரத்தம் கொடுக்கும் முன் AIDS நோயாளிகளின் இரத்தத்தைப் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் வேண்டாம். ஒருவருக்கு போட்ட ஊசினை மருத்துவர் உடனே குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார். புது ஊசியினைக் கொண்டே உங்களை பரிசோதிப்பார். உங்களின் இரத்தம் அரிதானவொன்று என்ற கவலை வேண்டாம். மருத்துவருடைய முழு ஆலோசனைப் பெற்றே நாம் இரத்த தானம் செய்வோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உடலிடை அதிகம் உள்ளவர்களுக்கு சத்து மிக அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையானது இன்றைய சமுதாயத்தில் பெருகுகின்றது. சத்துக் குறைபாடு என்பது ஒவ்வொரு நபரிலிருந்து வேறுப்படும். மிக ஒல்லியாக இருப்பவர்கள் கூட இரத்த தானம் செய்ய இயலும்.

    சத்துள்ள காய்கறிகள்

    சத்துள்ள காய்கறிகள்

    சத்துள்ள காய்கறி, பழங்களை தினந்தோறும் எடுத்துக் கொள்ளுதல் மிக அவசியமானவொன்று. இரத்த தானம் செய்யும் முன் நிறைய தண்ணீர், உணவு போன்றவற்றை மறவாமல் அருந்துங்கள். கொழுப்புப் பண்டங்களை தவிர்த்திடுங்கள். செளகரியமான தோல் பட்டையின் மேலே எளிதாக ஏறும்படியாக உடைகளை அணிந்து செல்லுங்கள். மது அருந்தி 8 மணி நேரத்திற்கு பின்பே இரத்தம் கொடுக்க முடியும். ஆதலால் இரத்த தானம் செய்யும் முன்பு மது அருந்துதல் கூடாது. ஊசிக் கண்டு பயம் கொள்ளாமல். நிதானமாக மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். இரத்தம் கொடுக்கும் முன் சிரமமான உடற்பயிற்சிகளை தவிர்த்திடுங்கள்.

    உடல் ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியமுள்ள அனைவரும் தயங்காமல் இரத்த தானம் செய்யுங்கள். 18 வயதிலிருந்து 60 வயதுக்குள் உள்ளோர் அனைவரும் இரத்த தானம் செயலாம். குறைந்த பட்சம் 50 கிலோ எடையுள்ளவர்கள் கட்டாயமாக இரத்த தானம் கொடுக்க தகுதியானவர். ஹீமோகுளோபின் அளவு 12.5 புள்ளிகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

    யாரெல்லாம் இரத்த தானம் தர இயலாது

    யாரெல்லாம் இரத்த தானம் தர இயலாது

    இருதய நோயாளிகள், இரத்தழுத்தமுள்ளவர்கள், கல்லீரல் மற்றும் நீரிழிவு நோயாளிகளால் இரத்த தானம் செய்ய இயலாது. மூன்று மாதத்திற்கு மேல் மலேரியா போன்ற நோய்களால் அவதிப்படுவோர் தவிர்ப்பது நல்லது. கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள் ஆறு மாதத்திற்கு பிறகு இரத்த தானம் செய்யலாம். HIV நோயாளிகள் தவிர்த்திடுங்கள்.

    நன்மைகள் அதிகம்

    நன்மைகள் அதிகம்

    இரத்தானம் செய்த பின் நம் உடலில் பழைய உயிர் அணுக்களின் எண்ணிக்கையானது குறைந்து, புதிய தட்டு அணுக்களின் எண்ணிக்கை பெருக்கும். புது இரத்தம் சுறப்பதால் உடல் புதுணர்ச்சியையும், சுறுசுறுப்பும், நோய் அற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும், உடல் கட்டுக்கோப்பாகவும் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஒரு உயிரினைக் காப்பாற்றிய பெருமையினையும், மன மகிழ்ச்சி, திருப்தியை காலம் முழுதும் கொண்டு செல்வோம்.

    " காலத்நி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

    ஞாலத்தின் மாணப் பெரிது ."

    குறள்

    ஒருவருக்கு இரத்த தானம் தேவை என்ற முக்கியத்துவத்தை அறிந்து தக்க சமயத்தில் அந்த நற்பணியை செய்து இரத்த தானம் செய்தோருக்கும் நன்றி தெரிவிக்கும் . அவளிடருந்து அந்த நற்பண்பைக் கற்றுக் கொண்டு இந்நாளில் இரத்த தானம் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வையும். இரத்த தானம் கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற ஊக்கத்தையும் பெற்றிடுவோம்.

    ‘இரத்த தானம் செய்வோம்,

    உயிரைக் காப்போம்'

    வாழ்க்கையில் மனிதர்களாக பிறந்த அனைவரும்வ் எதாவது ஒரு வகையில் பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். நம்மால் பணமாக, பொருளாகவோ உதவிச் செய்ய முடியாத பட்சத்தில். இரத்த தானம் போன்ற நற்பணியைச் செய்யலாமே!

    -ரேவதி, புதுச்சேரி

    English summary
    June 14 is observed as World blood donation day. People has to donate blood and has to save lives of the patients.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X