For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று வெல்லாவிட்டால் அவ்வளவுதான்.. சிக்கலில் விஸ்வநாதன் ஆனந்த்

Google Oneindia Tamil News

சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக மாக்னஸ் கார்ல்சனுடன் மோதி வரும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், வெற்றிக்காக கடுமையாக போராடி வருகிறார். இன்னும் 4 ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் இன்றைய சுற்றில் அவர் வென்றால்தான் நல்லது. இல்லாவிட்டால் பட்டத்தைப் பெறும் வாய்ப்பை அவர் இழப்பார்.

இன்று கார்ல்சனுக்கும், ஆனந்த்துக்கும் இடையே 9வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. இதில் ஆனந்த் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Magnus Carlsen and Viswanathan Anand

எட்டு போட்டிகளின் முடிவில் ஆனந்த் கை கீழிறங்கியே உள்ளது. இதில் 5 போட்டிகளில் கார்ல்சனும், 3 போட்டிகளில் ஆனந்த்தும் வென்றுள்ளனர். இன்னும் 4 போட்டிகள் உள்ளன நிலையில் ஆனந்த்துக்கு இன்றைய போட்டியில் வென்றாக வேண்டியது கட்டாயமாகியுள்ளது. மாறாக, கார்ல்சன் வென்று விட்டால், ஆனந்த்துக்கு சாம்பியன் பட்டம் பெறு்ம் வாய்ப்பு பறி போய் விடும். மாறாக கார்ல்சனை இன்று ஆனந்த் வீழ்த்தினால் அவரை சீர்குலைக்க முடியும்.

இன்றைய போட்டியில் தனது முழுத் திறமையையும் ஆனந்த் வெளிக் கொணருவார் என்ற நம்பிக்கையில் செஸ் ஆர்வலர்கள் உள்ளனர். அதேசமயம் கார்ல்சனும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் உறுதியாக ஆடி வருகிறார். எனவே போட்டி கடுமையாகவே உள்ளது.

With four games to go, defending champion Viswanathan Anand will probably have one last chance in the ninth game to defend his title against challenger Magnus Carlsen of Norway in the ongoing World Chess Championship here on Thursday. With eight games gone, Anand is down but still not out. Its a two-game deficit for the Indian ace and the ninth game would decide the course of the match as Anand plays white.

English summary

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X