For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுற்றுச்சூழலை பாதுகாக்க இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மெசேஜ்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இயற்கையை காப்பாற்ற ஆன்மீக அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளார் வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினம் நெருங்குகையில், கடுமையான பசுமை சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் முறையிடுகிறது.

சட்டங்கள் முக்கியம் என்றாலும், அவை சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை. சுற்றுச்சூழல் மீது அக்கறையை நமது மதிப்பீட்டு முறையின் ஒரு பகுதியாகவே நாம் கவனிக்க வேண்டும்.

இயற்கைக்கு கவுரவம்

இயற்கைக்கு கவுரவம்

உலகெங்கிலும் உள்ள அனைத்து பழங்கால கலாச்சாரங்களும் இயற்கைக்கு கெளரவம் அளித்திருக்கின்றன. தாவரங்கள், ஆறுகள், மலைகள் மற்றும் இயற்கையானது எப்பொழுதும் மதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்தியாவில் வெட்டும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக ஐந்து மரங்களை நட்டு வளர்ப்பது என்பது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கின்றது.

மதச்சடங்குகளில் தண்ணீர்

மதச்சடங்குகளில் தண்ணீர்

அனைத்து முக்கியமான சடங்குகள் மற்றும் விழாக்களில் ஒரு பகுதியாக தண்ணீர் இருந்து வந்திருக்கிறது. ஆறுகள் தாய்மார்களாக வழிபடப் பட்டு வந்தன. பூமி ஒரு தெய்வமாகக் கருதப்பட்டது. இயற்கையைப் புனிதமானதாகக் கருதும் இந்த அணுகுமுறை நவீன காலத்தில் புத்துயிர் பெற வேண்டும்.

நீர் சேமிப்பு, இயற்கை விவசாயம்

நீர் சேமிப்பு, இயற்கை விவசாயம்

நீரை சேமிக்க புதுமையான வழிமுறைகளைக் கண்டு பிடிக்கவும், ரசாயனமற்ற இயற்கை முறை வேளாண்மையை பயன்படுத்தவும் கற்பிக்கப் படவேண்டும்.

மக்கள் சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்கள், நீர்வளங்களின் புத்துயிர் அளிக்க , சாகுபடி நடத்த, மற்றும் பூஜ்ய அளவு வீண் ஆகியவற்றைப் பெறுவதற்காக செயல் முறைகளை உருவாக்க வேண்டும்.

பேராசையே மாசுபாட்டிற்கு காரணம்

பேராசையே மாசுபாட்டிற்கு காரணம்

வாழும் கலை கையிலெடுத்துள்ள 27 ஆறுகளுக்குப் புத்துயிர் அளிக்கும் பணித்திட்டம், மக்கள் சமுதாயம் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து பங்குதவி பெறுவதன் மூலம் நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகிறது. உண்மையில், மனிதனின் பேராசைதான் மாசுபாட்டின் மூல காரணம் ஆகும். விரைவான பயன் மற்றும் அதிக லாபங்களுக்காக பேராசையானது சூழலியல் சமநிலையை சீர் குலைக்கிறது.

மனதில் தேவை மாற்றம்

மனதில் தேவை மாற்றம்

மேலும் இது வெளிப்புறச் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது மட்டுமல்லாது , நுட்பமான எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டுகிறது. மாசுபாட்டின் அடிப்படைக் காரணமான மனித மனதினை நாம் கவனிக்க வேண்டும். மனிதர்களுக்கு தகவல் மற்றும் ஆறுதலைக் கொண்டு வருவதற்கு, இயற்கையைப் பயன்படுத்துவதே தொழில்நுட்பத்தின் நோக்கமாகும்.

ஆன்மீகம், மனித மதிப்பு தேவை

ஆன்மீகம், மனித மதிப்பு தேவை

ஆன்மீக மற்றும் மனித மதிப்புகள் புறக்கணிக்கப்படும்போது, தொழில்நுட்பம் ஆறுதலுக்குப் பதிலாக மாசு, மற்றும் அழிவுகளை எடுத்து வருகிறது. மனதில் கருணை , மற்றும் அக்கறையைத் தூண்டி விடுவதன் மூலம் சுற்றுச் சூழலுடன் ஆழமான தொடர்பைக் கொண்டு, பராமரிக்க முடியும். அதனால்தான் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாகவும் ஆன்மீக விழிப்புணர்வு இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

நேர்மறை சூழல்

நேர்மறை சூழல்

பண்டைய ஆன்மீக ஞானம் சூழலுடன் நமது தொடர்பை மனித அனுபவத்தின் முதல் மட்டமாக கருதுகிறது. நமது சூழல் சுத்தமாகவும் நேர்மறையானதாகவும் இருந்தால் நம் இருப்புகளின் மற்ற அடுக்குகளில் இது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வரலாற்று ரீதியாக, சூழலுடனான நெருங்கிய உறவு மனித மனதிற்குள் கட்டமைக்கப் பட்டுள்ளது.

இயற்கையுடன் தொடர்பு

இயற்கையுடன் தொடர்பு


இயற்கையோடுள்ள நமது தொடர்பிலிருந்து விலகத் துவங்கும்போது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தவும், அழிக்கவும் துவங்குகிறோம்.

இயற்கையோடு நமது தொடர்பை வளர்க்கும் இந்த அணுகுமுறைகளையும் பாரம்பரிய நடைமுறைகளையும் நாம் புதுப்பிக்க வேண்டும். மக்கள் பூமியைப் புனிதமானதாகக் கருதவேண்டும் ; மரங்கள் ஆறுகளைப் புனிதமானதாக கருதவேண்டும் ; மக்களைப் புனிதமானவர்களாக கருதவும், இயற்கையில் இறைவனைக் காணவும் மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இது உணர்திறனை ஊக்குவிக்கும்; உணர்திறன் நிறைந்த ஒரு நபர் இயற்கையை கவனித்து, சுற்றுச்சூழலை வளர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்யமுடியாது.

ஆன்மீகத்தான் சாத்தியம்

ஆன்மீகத்தான் சாத்தியம்

எல்லாவற்றிற்கும் மேலாக, மன அழுத்தம் இல்லாத ஒரு திறந்த மனதுடன் நம் உலகத்தை அனுபவித்து மகிழ வேண்டும், அந்த நிலையிலிருந்து நம் அழகிய பூமியைப் பாதுகாப் பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இது நிகழும் பொருட்டு மனிதன் பேராசைக்கும் சுரண்டலுக்கும் மேலே உயர வேண்டும். ஆன்மீக வழி, ஒருவரின் சொந்த இயல்பின் ஆழமான அனுபவம் ஆகியவை மற்றவர்களுடன் மற்றும் நம் சூழலுடனான இந்த முக்கியமான உறவுக்கான வழியை வழங்குகிறது. சுற்றுச் சூழல் சீரழிவுக்கு இட்டுச்செல்லும் பேராசையைக் கட்டுப்படுத்தி ஆன்மீகம் ஒருவரது மெய்யுணர்வை உயர்த்துகிறது. இது பூமி முழுவதிலும் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுகளை ஊக்குவிக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் வளர அனுமதிக்கும்போதே தற்போதைய நூற்றாண்டின் சவாலான சுற்றுச்சூழலில் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும். ஆன்மீக மதிப்பீடுகள் மட்டுமே இந்த சமநிலையை அடைய உதவும்.

English summary
Sri Sri Ravi Shankar of Art of living insist importance of nature and explained how to preserve that by the human beings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X