• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்டியோபோரோசிஸ் தினம்: எலும்பு புரை நோயை தடுக்க ஜோதிட ரீதியான பரிகாரங்கள்

By Mayura Akilan
|

சென்னை: நோய்களுக்கும் கிரகங்களுக்கும் அதிக தொடர்பு உள்ளது எனவேதான் ஏதாவது நோய் ஏற்பட்டால் அதற்கு பரிகாரம் தேடி ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கிறோம். உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் 20ஐ உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினமாக அறிவித்துள்ள நிலையில் அந்த நோயை பற்றியும் அதற்கான பரிகாரங்களையும் பிரபல ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன் கூறியுள்ளார் படியுங்கள்.

ரோட்ல நடந்து போயிக்கிட்டு இருக்கும்போது கல்லு தடுக்கி கீழே விழுந்துட்டேன். விழக்கூட இல்ல, லேசா சாஞ்சுட்டேன். பாம் தேய்ச்சுட்டுப் படுத்துடலாம்னு பார்த்தா, வலி தாங்க முடியல. ஹாஸ்பிடல் போனா, 'கால் எலும்பு உடைஞ்சுடுச்சு'னு சொன்னாங்க. 'சும்மா ஸ்லிப் ஆகி விழுந்ததுக்கு எலும்பு உடைஞ்சுருச்சா?'னு அதிர்ச்சியா கேட்டா, 'கீழ விழக்கூட வேணாம்... தும்மும்போதுகூட எலும்பு முறிஞ்சுடலாமாம்ஆஸ்டியோபோரோசிஸ் வந்தவங்களுக்கு.

World Osteoporosis Day October 20

'ஆஸ்டியோபோரோசிஸ்' எனும் எலும்பு நுண்துளை நோய் இன்று 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகமாகத் தாக்கி, நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறது. ஆண்களைவிட, பெண்களையே அதிகமாக இந்நோய் குறிவைத்து தாக்குகிறது.

இந்த நோயை எப்படிக் கண்டறியலாம்; சிகிச்சை முறைகள் எப்படி; இதை சரிபடுத்தும் உணவுமுறை, உடற்பயிற்சிகள் என்னென்ன. மேலும் ஜாதக ரீதியாக இந்த நோய் வருவதற்கான கிரக நிலை என்ன என்பதையும் பார்ப்போம்.

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். உடலில் வைட்டமின்-டி நார்மல் லெவல் 30-க்கு மேல் இருக்கவேண்டும். இதில் குறைபாடு ஏற்படும்போது, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உண்டாகிறது. 30 வயதுக்கு மேல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். 40 வயதுக்கு மேல் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாட்டால் சிலருக்கு எலும்புத் தேய்மானம் தீவிரமடைந்து, எலும்பு மிகவும் பலவீனமாகி, சிறு அடி பட்டாலும், ஏன்... உட்கார்ந்து எழும்போதுகூட நொறுங்கிவிடக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

இது தண்டுவடத்தைத்தான் அதிகமாக பாதிக்கும். அடுத்ததாக, இரண்டு இடுப்பு மூட்டுகளும் இதன் இலக்கு. சோர்வு, களைப்பு, சதை வலி ஏற்படுத்தும், எலும்பு வலிகளைத் தரும் இந்நோயை 'சைலன்ட் கில்லர்' என்று அழைப்பதுண்டு. அந்தளவுக்கு, நாம் அறியாமலேயே நம்மைத் தாக்கும்.

பெண்களுக்கு ஏன் அதிக பாதிப்பு?

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின்-டி, வீட்டைவிட்டு வெளியேசெல்லும் ஆண்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், வீட்டுக்குள்ளே முடங்கும் பெண்களுக்கு அந்த அளவுக்குக் கிடைப்பதில்லை. அதனாலும் இந்த நோய் வரலாம். குழந்தைக்குப் பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு கால்சியம் சத்து இருமடங்காகத் தேவைப்படும். இதை ஈடுகட்டும் அளவுக்கு கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், கால்சிய குறைபாடும் ஏற்படும். இப்படி கால்சியம் சத்துக் குறைவதற்கான சூழ்நிலைகள், ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இருப்பதால், அவர்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கால்சியம் அவசியம்

பொதுவாக நாற்பது வயதிற்கு மேல்தான் முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும். இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள். நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான். உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும். கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர்.

உணவில் கால்சியம்

தினசரி நம் உடலுக்கு கிட்டத்தட்ட 1 முதல் 1.3 கிராம் வரை கால்சியம் சத்து தேவை. இதைப் பெற, காலை - மதிய உணவுக்கிடையே தினமும் 1 கப் மோர் சாப்பிடலாம். மதிய உணவில் வாரம் இரு நாள் ராகி ரொட்டி அல்லது கம்பஞ்சோறு, கூடவே மறக்காமல் கீரை, 1 கப் பீன்ஸ், மாலையில் 1 கப் பழச் சாறு, இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால்... இந்த 1 கிராம் கால்சியம் கிடைத்து விடும். பசும்பாலில் கால்சியம் நிரம்ப உள்ளது. பழங்கள், கீரைகள் என்று குறிப்பிட்ட சிலவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதும் சிறந்த பலனளிக்கும்.

சைவம், அசைவ உணவுகள்

 உ லராத சீமை அத்திப்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யா, வெந்தயக்கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிகீரை, பாலக்கீரை, காலிஃப்ளவர் கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். தானிய வகைகளில், கால்சியத்தில் ராகிதான் டாப். பெரியவர்களுக்கு ராகி தோசையும், சிறுவர்களுக்கு ராகி - பனைவெல்ல உருண்டையும் செய்துகொடுக்கலாம். கொள்ளு, ரஜ்மா இரண்டுமே சோயாவுக்கு இணையாக கால்சியம் உள்ளவை. அசைவத்தில், நண்டில் எக்கச்சக்க கால்சியம் கிடைக்கும். அதேபோல் மீனிலும் கால்சியம் அதிகம்.

ஜோதிட காரணங்கள்

ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோய்க்கான ஜோதிட ரீதியான காரணங்களை அறிந்து கொள்வோம். எலும்புக்கு காரகனாக சூரியனும் எலும்பிலுள்ள மஜ்ஜைக்கு காரனமாக செவ்வாய் இருந்தாலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு புரை நோய்க்கும் மந்தன் எனப்படும் சனைஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான். மேலும் ஆயுர்வேதத்தில் எலும்புபுரை நோயை வாத நோயாகவே குறிப்பிடுகின்றனர்.என்றாலும் சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது. மேலும் சூரியன் மற்றும் செவ்வாயும் சனியுடன் அசுப சேர்க்கை பெறுவதும் கூட எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

எந்த ராசிக்காரர்களை தாக்கும்

உடம்பின் கட்டுமானத்திற்க்கு முக்கியமான எலும்பு சம்மந்தமான வியாதிகளை ஜாதகத்தில் நில ராசி அதிபதிகளின் நிலையை கொண்டு அறிய முடிகிறது. அந்த விதத்திலும் நில ராசி அதிபதிகளான சுக்ரன் (ரிஷபம்) , புதன் (கன்னி) மற்றும் சனி (மகரம்) ஆகியவற்றின் தொடர்பு எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

சனி, சூரியன் காரணம்

அல்லோபதி மருத்துவத்தில் சுண்ணணாம்பு சத்து குறைபாடு எனும் கால்சியம் சத்து குறைவே இந்த நோய்க்கு காரணம் என்கிறது. அந்த விதத்திலும் கால்சியம் எனும் தாதுவிற்க்கு காரக கிரகம் சனியே ஆகும். மேலும் கால்சியம் சமநிலைக்கு மாங்கனிசு எனப்படும் மெக்னிஷியம் (காரக கிரகம் சூரியன்) இரும்பு சத்து (காரக கிரகம் செவ்வாய்) ஆகியவற்னின் நிலைப்பாடும் இந்த நோயை தெரிவிக்கிறது. மேலும் சர்கரை சத்து அதிகமாவதும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி எலும்பு புரைநோயை ஏற்படுத்துகிறது. சர்க்கரை சத்திற்கான காரக கிரகம் சுக்ரன் ஆகும்.

வைட்டமின் சத்து குறைவு

உடம்பில் வைட்டமின் D3 எனப்படும் மெக்னீஷியம் குறைபாடு உள்ளவர்களை சூரிய வெளிச்சத்தில் நிற்க சொல்லுவது அனைவரும் அறிந்ததே.

சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இனைவு பெறுவது, அசுப பரிவர்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தபடுவது.

காலபுருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனத்தில் சனி, சுக்ரன் போன்ற கிரகங்கள் நிற்பது, ஜாதகத்தின் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிறபது போன்றவை வாத நோயை தெரிவிக்கிறது.

ஏன் ஏற்படுகிறது?

எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது.

பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இனைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது.

மூலநூல்களில் காணப்படும் வாதநோய்க்கான கிரக சேர்க்கைகள்:

1. சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது

2.சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது.

3.சூரியன், சந்திரன் மற்றும் சனி லக்னத்தோடு தொடர்பு கொள்வது.

4.குரு லக்னத்தில் நின்று சனி மூலை ராசியான மிதுனத்தில் அல்லது 7ம் வீட்டில் நிற்பது.

5.சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது.

6. சனியும் ராகுவும் 2அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது.

7.சூரியன் கடகத்தில் நின்று சனியுடன் எந்தவிதத்திலாவது தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6ம் வீட்டில் நிற்பது.

9.சூரியனும் சுக்ரனும் தசா புத்தி நாதர்களாக அமைவது.

10. சனியும் செவ்வாயும் 6 அல்லது 12 வீட்டில் நிற்பது.

பரிகாரங்கள்

1. சனிஸ்வரபகவானுக்கு உகந்த சனி கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை ஸ்நானம் செய்யலாம். இதில் நல்லெண்ணை சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

2. சூரியனுக்கும் சனீஸ்வரருக்கும் சிவ வழிபாடே சிறந்ததாகும். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரரை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வணங்குவது எலும்பு புரை நோய் வருவதை தடுக்கும். இந்த கோயிலில் திரு ஞான சம்மந்தர் எலும்பிலிருந்து இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்பித்தது குறிப்பிட தக்கதாகும்.

3. மார்கண்டேயனுக்காக திருக்கடையூரில் எமனை வதம் செய்து சாம்பலாக்கி திருச்சி அருகில் உள்ள திரு பைஞ்சிலி எனும் தலத்தில் அஸ்தியிலிருந்து (எலும்புச்சாம்பல்) எமனை மீண்டும் உயிர்பித்ததால் திரு பைஞசிலி ஞீலிவன நாதர் திருக்கோயிலும் சிறந்த பரிகாரத்தலமாகும்.

4. பிரம்மனின் கபாலத்தை கையில் ஏந்தி எலும்பு மாலை அணிந்த பைரவ வழிபாடும் சிறந்த பலனளிக்கும்.

5. சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பது எலும்புக்கு காரகனாம் சூரியனுக்கு உகந்தது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
World Osteoporosis Day is celebrated by hundreds of thousands around the world on October 20th each year.long campaign dedicated to raising global awareness of the prevention, diagnosis and treatment of osteoporosis and metabolic bone disease. Organized by the International Osteoporosis Foundation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more