For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீவஜோதியின் அழகு.. சபலப்பட்ட சாப்பாட்டு சாம்ராட்.. சரிந்து.. மறைந்தும் போன சரவண பவன் ராஜகோபால்!

இறுதிவரை சிறை செல்லாமலேயே உயிரைவிட்டார் அண்ணாச்சி ராஜகோபால்

Google Oneindia Tamil News

சென்னை: பெண்ணாசையால் ஒட்டுமொத்த பெயரையும் கெடுத்து கொண்ட சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் மறைவினை நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது!

அன்றைய தினங்களில் சினிமாக்களையும், சீரியல்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பத்திரிகைகளில் முக்கிய இடத்தை பிடித்தவர்தான் ஜீவஜோதி என்ற இளம்பெண்!

ஜீவஜோதியின் தந்தை, சரவணபவன் ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்தவர். இப்படித்தான் ஜீவஜோதியின் குடும்பத்தில் சரவண பவன் ஓனர் ராஜகோபாலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஜீவஜோதியின் அழகில் மயங்கி விழுந்தார் ராஜகோபால்!

தூக்கில் தொங்கிய கயிறு எங்கே.. தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே.. உலுக்கிய பாத்திமா மரணம்தூக்கில் தொங்கிய கயிறு எங்கே.. தமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே.. உலுக்கிய பாத்திமா மரணம்

ஜீவஜோதி

ஜீவஜோதி

ஏற்கனவே 2 மனைவிகளை உடைய அண்ணாச்சி, 3-வதாக ஜீவஜோதியை முழுசாக அடைய முயற்சித்தார். இதற்காக ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை அழைத்து மிரட்டி, விலகும்படியும் சொன்னார். மனைவியை விட்டுத்தர முடியாது என்று துணிந்து அண்ணாச்சி முகத்தை பார்த்து சொன்னார். இதுதான் கொலை செய்யவும் அண்ணாச்சியை தூண்டியது.

சாந்தகுமார்

சாந்தகுமார்

கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி சாந்தகுமார் கடத்தப்பட்டார்.. கடைசியில், 5 நாட்களுக்கு பிறகு கொடைக்கானல் மலை அடிவாரத்தில் சாந்தகுமாரின் உடலை கண்டெடுத்தனர். சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் கடத்தி செல்லப்பட்டு, மலை உச்சியில் இருந்தும் தூக்கி வீசி கொல்லப்பட்டார் சாந்தகுமார்.

ஆயுள்

ஆயுள்

கடைசியில் தமிழகம் முழுக்க நாறிப் போனார் ராஜகோபால். 2009-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை அளித்தது. ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும் ராஜகோபாலின் தண்டனையை சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் உறுதி செய்ததுடன், ஜூலை 7-ம் தேதி சிறைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னது.. இறுதியில் சிறைக்கு சென்ற நாளன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. கடைசி வரை சிறைக்கு செல்லாமலேயே உயிரையும் விட்டார் ராஜகோபால்!

செல்வாக்கு

செல்வாக்கு

ஆரம்ப காலத்தில், அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சிதான் அண்ணாச்சி ராஜகோபாலின் வளர்ச்சியும். பணம் கொட்டி கிடந்தால் என்ன, செல்வாக்கு குவிந்து கிடந்தால் என்ன, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் மொத்த வாழ்க்கையையும் சபலத்தாலும், பேராசையாலும் தொலைத்தே விட்டார் என்பதற்கு உதாரணம்தான் ராஜகோபால். மண்ணாசை, பெண்ணாசை இரண்டுமே மனிதனை மானம் மரியாதை இழக்க வைத்து முடிவில் அவனையே அழித்துவிடும் என்பதற்கு அண்ணாச்சிதான் சிறந்த உதாரணம்!

English summary
year ender 2019: hotel saravana bhavan annachi rajagopals death and jeevajothis flashback
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X