For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூ இயர்ன்னா சர்.. புர்ருனு டூவிலர்ல போய்தான் கொண்டாடனுமா? இப்படியும் கொண்டாடலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவில் இரு சக்கர வாகனங்கள் வாம்மா மின்னல் என்ற ரேஞ்சுக்கு பறக்கும். இதனால் பெரும்பாலானவர்கள் விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளையோ உயிரையோ இழக்க நேரிடுகிறது.

ஆங்கில புத்தாண்டுக்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 31-ஆம் தேதி மாலை முதலே களைகட்டிவிடும். புத்தாண்டை நண்பர்களுடனும் நண்பிகளுடனும் வரவேற்பதற்காக பெரும்பாலான இளைஞர்கள் கடற்கரையில் கூடுவர்.

மேலும் பெரும்பாலான ஹோட்டல்களிலும் பார்ட்டி, கெட் டூ கெதர் என கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிடும். நள்ளிரவு 12 மணி பிறந்ததும் இளைஞர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு சீறி பாய்வர்.

கருப்பு தங்கம்.. கடைசி வரை தரத்தை இழக்காமல்... வாழ்ந்து மறைந்த கள்ளங்கபடமற்ற அரசியல் ஞானி கக்கன்! கருப்பு தங்கம்.. கடைசி வரை தரத்தை இழக்காமல்... வாழ்ந்து மறைந்த கள்ளங்கபடமற்ற அரசியல் ஞானி கக்கன்!

விபத்து

விபத்து

இதுபோல் ஆளில்லா சாலைகளில் வேகமாக டூவிலரில் பறப்பதால் சில நேரங்களில் விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளையோ உயிரையோ இழக்க நேரிடுகிறது. இது போல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விபத்தாவது நடைபெறாமல் இருந்ததில்லை.

புத்தாண்டு

புத்தாண்டு

எனவே விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது போல் விபத்தில்லா புத்தாண்டை நாம் கொண்டாட வேண்டும். விபத்துகளில் இரு சக்கர வாகனத்தில் வருவோர் சிக்குவதோடு சாலைகளில் நடந்து செல்வோரும், மற்ற வாகனங்களிலும் செல்வோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

டுவீலர்

டுவீலர்

பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட இளைஞர்கள் முன் வர வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே செல்ல வேண்டும். ஒரு டுவீலரில் 3-க்கும் மேற்பட்டோர் செல்லக் கூடாது.

விபத்தில்லாமல் புத்தாண்டு

விபத்தில்லாமல் புத்தாண்டு

புத்தாண்டு வாழ்த்துகளை இரவோடு இரவாக சொன்னால்தான் என்றில்லை. விடிந்த பிறகு நண்பர்களை சந்தித்து தெரிவிக்கலாம். வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம். முன்பு போல் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் முறைகளை மீண்டும் தொடங்கலாம். மொத்தத்தில் சொல்ல போனால் விபத்தில்லாமல் புத்தாண்டை கொண்டாடலாம்.

சுத்தப்படுத்துதல்

சுத்தப்படுத்துதல்

தேவையில்லாமல் பட்டாசு வெடிப்பது, கேக் வெட்டுவதை செய்யாமல் அந்த பணத்தை வைத்து ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யலாம்.
ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.
கல்விக்கான உதவியை செய்யலாம்.
ஏழை குழந்தைகளுக்கு துணிமணிகளை எடுத்து தரலாம்.
சாலைகள், சாக்கடைகள், நீர் நிலைகளை சுத்தம் செய்யலாம்.

English summary
Year Ender Stories 2019: Here are the best ways to celebrate New Year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X