For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறைந்தார் மனோரமா.. விடை பெற்ற ஷேவாக்.. கோபமூட்டிய கோவன் கைது.. அக்டோபர் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நகைச்சுவை பேரரசி மனோரமாவின் மரணம்தான் அக்டோபர் மாதத்தின் முக்கிய சோகச் சம்பவம். அதேபோல நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னாவின் திடீர் மரணமும் அனைவரையும் அதிர வைத்தது.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஷேவாக்கும், ஜாகிர் கானும் இந்த மாதத்தில்தான் ஓய்வை அறிவித்தனர்.

மக்களை மொத்தமாக் கொந்தளிக்க வைத்த கோபன் கைதும் இந்த அக்டோபரில்தான் நடந்தேறியது.

சஷாங் மனோகர்

சஷாங் மனோகர்

அக்டோபர் 4ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் சஷாங் மனோகர் தேர்வு செய்யப்பட்டார்.

மகளிர் காங். பொதுச் செயலாளர் நக்மா

மகளிர் காங். பொதுச் செயலாளர் நக்மா

மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நடிகை நக்மாவை அக்டோபர் 6ம் தேதி கட்சி மேலிடம் நியமித்தது.

மறைந்தார் மனோரமா

மறைந்தார் மனோரமா

அக்டோபர் 10ம் தேதி நகைச்சுவை பேரரசி நடிகை மனோரமா மரணமடைந்தார்.

யுவராஜ் சரண்

யுவராஜ் சரண்

அக்டோபர் 11ம் தேதி ஓமலூர் வாலிபர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாருக்குத் தண்ணி காட்டி வந்த யுவராஜ் போலீஸிடம் சரணடைந்தார்.

ஜாகிர்கான் ஓய்வு

ஜாகிர்கான் ஓய்வு

அக்டோபர் 15ம் தேதி இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜாகிர் கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

தமிழினி மரணம்

தமிழினி மரணம்

அக்டோபர் 19ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தலைவர் தமிழினி புற்றுநோய் காரணமாக இலங்கையில் மரணமடைந்தார்.

ஷேவாக் விடை பெற்றார்

ஷேவாக் விடை பெற்றார்

அக்டோபர் 20ம் தேதி இந்தியாவின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அமராவதிக்கு அடிக்கல்

அமராவதிக்கு அடிக்கல்

அக்டோபர் 22ம் தேதி ஆந்திர மாநில புதிய தலைநகரான அமராவதி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

தாயகம் திரும்பிய கீதா

தாயகம் திரும்பிய கீதா

அக்டோபர் 25ம் தேதி காது கேளாத, வாய் பேச முடியாத இந்தியப் பெண் கீதா 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார்.

சோட்டா ராஜன் கைது

சோட்டா ராஜன் கைது

அக்டோபர் 26ம் தேதி தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலி தீவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

விவேக் மகன் மரணம்

விவேக் மகன் மரணம்

அக்டோபர் 29ம் தேதி நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா குமார் மரணமடைந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கோவன் கைது

கோவன் கைது

அக்டோபர் 30ம் தேதி மூடு டாஸ்மாக்கை மூடு பாடலைப் பாடியதற்காக மகஇக பாடகர் கோவன் கைது செய்யப்பட்ட செயல் அனைவரையும் அதிர வைத்தது.

English summary
Singer Gopan arrest, death of Manorama and the retirement of Zaheer Khan and Shewag were the attractions of the month October in this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X