For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக யோகா திருவிழா 2018 - பெசண்ட் நகர் கடற்கரையில் கின்னஸ் சாதனைக்காக யோகா நிகழ்ச்சி

சென்னையில் யுவ யோகா மந்திரம் டிரஸ்ட்சின் உலக யோகா திருவிழா சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் யுவ யோகா மந்திரம் டிரஸ்ட் சார்பில் உலக கின்னஸ் சாதனைக்காக ஒரே நேரத்தில் யோகாவில் புஜபீடாசனம் செய்ய உள்ளனர்.

By jaya
Google Oneindia Tamil News

சென்னை: யுவ யோகா மந்திரம் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் இணைந்து 3வது உலக யோகா திருவிழாவை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இன்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக யோகா நடைபெறுகிறது.

மகாபலிபுரம் தமிழ்நாடு டூரிசம் ரிசார்ட்டில் ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழக இயக்குநர் பழனிக்குமார் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியின் நிர்வாகி டாக்டர் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

Yoga world festival 2018 at Mahabalipuram.

சிறப்பான முறையில் யோகா செய்து அசத்தியவர்களுக்கு 25ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அபூர்வா வர்மா ஐஏஎஸ் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக போத்தீஸ் நிறுவன இயக்குநர் ரமேஷ் பங்கேற்று பரிசளித்தார்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி இன்று சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஓரே நேரத்தில் ஏராளமானோர் புஜபீடாசனம் செய்ய உள்ளனர். இந்த கின்னஸ் சாதனையை தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பாண்டியராஜன்,பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். பத்மஸ்ரீ ஞானாம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

English summary
Yoga performance at Yoga world festival 2018 at Mahabalipuram.Guinness Record Created in doing Yoga at Chennai Merina Beach
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X