For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இருந்து இதையும் கூட கற்றுக் கொள்ளலாம்!

Google Oneindia Tamil News

ரபரப்பான காலை வேளையில் அலுவலகத்தின் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே நுழைய முற்படுகிறார் அப்பொழுது கதவின் மறுபக்கத்தில் ஒருவர் வெளியே வரத் தயாராக உள்ளார். உடனே இந்தப் பெண்மணி அவருக்கு வழி விடுகிறார், வெளியில் செல்பவர் இந்தப் பெண்மணிக்கு புன்முறுவல் முகத்தோடு நன்றி சொல்லிக் கொண்டே செல்கிறார். அவர் சென்ற பிறகு இந்தப் பெண்மணியும் உள்ளே செல்கிறார்.

வெள்ளிக்கிழமை தியேட்டரில் ரிலீஸான புதுப் படத்தை பார்க்க ஒரு குடும்பம் வருகிறது, அப்பொழுது படம் முடிந்து வெளியே இரு காதல் ஜோடிகள் வருகிறார்கள். உள்ளே நுழைய தயாராக உள்ள குடும்பத்தின் சிறுவன் ஒருவன் கதவைத் திறந்து அந்த காதல் ஜோடிகள் வெளியே வர உதவுகிறார். அவர்களும் நன்றி சொல்லிக் கொண்டே கடந்து செல்கிறார்கள். அவர்கள் சென்ற பிறகு இந்தக் குடும்பம் உள்ளே நுழைகிறது.

You can learn this too from the US

இதில் யார் கதவைத் திறந்து விடுகிறார்களோ அவர்கள் மற்றவரை உள்ளேயோ அல்லது வெளியிலோ செல்ல அனுமதிக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் கதவைத் திறந்ததும் மறுபக்கத்தில் உள்ளவர்கள் யார் கதவைத் திறந்து விடுகிறார்களோ அவர்களை வரச் சொல்வது, கதவைத் திறந்து விடுபவர்களின் உதவியை மறுப்பது போல ஆகும். அதனால் பெரும்பாலும் கதவைத் திறந்து விடுபவர்களின் உதவியை மறுபக்கத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்லுவார்கள்.

மழைக்காலம் ஒன்றில் பேருந்தில் பயணம் செய்யும் அந்தச் சிறுவனுக்கு தும்மல் வருகிறது. தும்மும் பொழுது கைக்குட்டையை வைக்க மறந்து விடுகிறார், உடனே அருகில் இருக்கும் அந்தச் சிறுவனின் அம்மா கைக்குட்டையை சிறுவனிடம் கொடுத்து இதை முகத்தில் வைத்துக் கொடுத்தான் தும்ம வேண்டும் இல்லாவிட்டால் சளி மற்றவர்களுக்கும் பரவி விடும் என்கிறார். சிறுவனும் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து சாரி சொல்கிறார்.

பொழுதுபோக்கு மாலில் சிறுவன் ஒருவன் தான் சாப்பிட்ட சாக்லேட் கவரை எங்கே போடுவது என்று தன் அப்பாவிடம் கேட்கிறார். அவரது அப்பாவும் தன் குழந்தையை குப்பைத் தொட்டி இருக்கும் இடத்திற்குக் கூட்டிச் சென்று குப்பையைப் போட உதவி செய்கிறார்.

மேலே சொன்ன அனைத்து நிகழ்வுகளும் நடந்தது இங்கே அல்ல, அமெரிக்காவில்! ஆம் அமெரிக்காவில் சிறுவர் முதல் பெரியவர் வரை பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுத் தரப்படுவதோடு நடைமுறையும் படுத்தப்படுகிறது.

மேலைநாடுகளைப் பார்த்து உடை, பொழுதுபோக்கு உள்ளிட்ட எத்தனையோ விசயங்களைக் கற்றுக் கொள்ளும் நாம் இது போன்ற நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

- விஜயன் பிரதீப்

English summary
In US, parents are teaching their kids good habits from the beginning. Here is a piece from our reader on this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X