• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீட்சா முதல் பிரியாணி வரை அத்தனையும் கிராமத்து ஸ்டைலில்...இணையத்தில் கலக்கும் தமிழ் டாடி!

By Gajalakshmi
|

சென்னை : கிராமிய உணவு வகைகளை சமைத்துக் காட்டி, யூடியூப் வழியே இந்திய உணவுப் பிரியர்களை வெகுவாக வசீகரித்து வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம்.

இணையப் புரட்சியால் நடந்திருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், நாம் இருந்த இடத்தில் இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பது தான். ஆனால் அதற்கு அழகு முக்கியமல்ல, திறமை இருந்தாலே போதும் என்பதற்கான முன் உதாரணம் தான் ஆறுமுகம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் பிறந்தவர்கள் 12 பேர். படிப்பறிவு அவ்வளவாக இல்லாவிட்டாலும் அனுபவத்தில் அனைத்தையும் கற்ற ஆறுமுகம் ஏறத்தாழ 18 மொழிகளை அறிந்தவர். ஜவுளி வியாபாரியாகவும் இருந்து வந்த ஆறுமுகம், தற்போது பெயின்டராக பணியாற்றி வருகிறார்.

 தமிழ் 'டாடி'

தமிழ் 'டாடி'

ஆறுமுகத்தின் உறவினர்களிடையே பெரிய அளவில் மதிப்பு இல்லை. இதனால் அவரைப் பெருமைப்படுத்துவதற்காக ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் எடுத்த முயற்சியால் இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார் தமிழ் ‘டாடி'.

 வில்லேஜ் ஃபுட் பேக்டரி

வில்லேஜ் ஃபுட் பேக்டரி

ஆறுமுகம் - செல்வி தம்பதியின் முதல் மகன் கோபிநாத். பொறியியல் படிப்பை முடித்து விட்டு சென்னையில் திரையுலகில் இரண்டு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். திரைத்துறை பெரிய அளவில் கைகொடுக்காததால் வருமானத்திற்காக இவர் 'தமிழ் ஃபாக்டரி' தொடங்கினார். ஆனால் அதுவும் கைகொடுக்காததால், புதிதாகத் தனது குடும்பத்தினரை வைத்துத் துவங்கிய இரண்டாவது யூடியூப் சேனல்தான் 'வில்லேஜ் ஃபுட் ஃபாக்டரி'.

 எச்சில் ஊற வைக்கும் சமையல்

எச்சில் ஊற வைக்கும் சமையல்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சேனல் துவங்கப்பட்ட இந்த சேனலில் தாய் செல்வியின் சமையலை பிரபலப்படுத்த விரும்பினாலும் எதேச்சையாக எடுத்த தந்தையின் வீடியோ உயிரூட்டத்துடன் இருந்ததால் அவரையே கதாநாயகனாக ஃபிக்ஸ் செய்தார் கோபிநாத். வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி சானலில் வரும் அனைத்து வீடியோக்களிலும் கிராமிய உணவைச் சமைத்து அனைவரின் நாவிலும் செய்முறையிலேயே நாவில் எச்சிலூர வைக்கிறார் ஆறுமுகம்.

 5 லட்சம் பேர்

5 லட்சம் பேர்

தொடக்க காலத்தில் பெரிதாக வரவேற்பு இல்லாவிட்டாலும் இன்று சுமார் 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் இந்த யூடியூப் சேனலை. தற்போது வரை 93 சீமையல் வீடியோக்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது.

 இயற்கை சமையல்

இயற்கை சமையல்

இயற்கைச் சூழலில், இயற்கையான பொருட்களைக் கொண்டு வெறும் கல் வைத்து மூட்டிய அடுப்பில் விறகு குச்சிகளை வைத்து சமைக்கிறார் இந்த அனுபவ செஃப் ஆறுமுகம். மாதா மாதம் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 60 ஆயிரம் வரை அதிகரிப்பதால் சுமார் 2 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறுகிறார் கோபிநாத்.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

100 கோழிக் கால்கள் கிரேவி மற்றும் 300 முட்டை பொடிமாஸ். 500 நண்டு குழம்பு, முழு ஆட்டுக்கறி, பெரிய கோலா மீன் சமையல், பீட்சா என பிரம்மாண்ட சமையலை செய்கிறார் தமிழ் டாடி. வில்லேஜ் ஃபுட் பேக்டரி யூ டியூப் சேனலின் பிரபலத்தை பார்த்து பலரும் விளம்பரம் கொடுக்க முன் வந்தாலும், அதனை தட்டிக் கழித்துள்ளார் கோபிநாத்.

சேவை

வருமானத்தில் வரும் 30 சதவிகிதம் பணத்தை அடுத்த தயாரிப்பிற்கு உபயோகிப்பது யூடியூப் சேனலுக்காக சமையல் செய்முறை விளக்கம் அளிக்கின்றனர். மாதிரி சமையல் தானே என்று ஒரு ஆழாக்கு என்று சிம்பிள் சமையல் செய்யாமல் வஞ்சனை இல்லாமல் பிரம்மாண்டமாக சமைத்துக் காட்டி அதனை ஆறுமுகமே ருசித்தும் காட்டுகிறார். அதிக அளவில் சமைக்கும் உணவை வீடியோவிற்கு பயன்படுத்திய பின்னர், வீதி வீதியாகச் சென்று வீடற்ற ஏழை மக்களுக்கு அளித்து வருகிறார்கள் இவர்கள்.

மகிழ்ச்சி

"தங்கள் குடும்பத்தாரே மதிக்காத ஒருவரை இன்று உலகமே டாடி என்று கொண்டாடுவதால் மகிழ்ச்சியில் உள்ளார் கோபிநாத். சுவையான சாப்பாடு மட்டுமல்ல தர்பூசணி ஜூஸ், 50 கிலோ ஆர்கானிக் திராட்சைகளைக் கொண்டு திராட்சை ஜூஸ் என்று வேறு லெவல் சமையலை செய்து அனைவருக்கும் கிராமத்து மணத்தை யூடியூப் வீடியோ மூலம் ஊட்டுகிறார் இந்த தமிழ் ‘டாடி'

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
You tube channel village food factory promoting foods in village style with their hero Tamil Daddy gains popularity with 5 lakhs subscribers and nearly 10 crore viewers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more