ஊருக்கு ஒரு காதல்.. அதிரடியாக கைவிட்ட காதலர்கள்.. விஷ ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை!
சென்னை: திருச்சியில் வேலை பார்த்தபோது ஒரு காதல், சென்னைக்கு வந்ததும் இன்னொரு காதல் என இரண்டு பேரைக் காதலித்த இளம் நர்ஸ், கடைசியில் இவரது லீலைகள் தெரிய வந்து இரு காதலர்களும் கைவிட்டதால் வேதனையில் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
சென்னை கோயம்பைடைச் சேர்ந்தவர் கார்த்திகா. 21 வயதுதான் ஆகிறது இவருக்கு. நர்ஸிங் முடித்தவர். திருச்சியில் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். பின்னர் சமீபத்தில் சென்னைக்குத் திரும்பி விட்டார்.
இவர் தற்போது உயிருடன் இல்லை. காரணம், தற்கொலை செய்து கொண்டு வி்ட்டார். இவரது தற்கொலை முடிவுக்குக் காரணம் காதல்.. ஒரு காதல் இல்லை, இரண்டு காதல். இருவரைக் காதலித்து இருவரையும் மோசடி செய்ததால், அது அவர்களுக்குத் தெரிய வந்து கைவிட்டதால், வேதனையில் உயிரை மாய்த்துள்ளார்.
இதுதான் கார்த்திகாவின் கதை....

கால் வலிக்கு சிகிச்சை பெற வந்த சீனிக்குமார்
திருச்சியில் தனியார் மருத்துவமனையில் கார்த்திகா வேலை பார்த்தபோது அந்த மருத்துவமனையில் 28 வயதான சீனிக்குமார் என்பவர் கால் வலி காரணமாக சிகிச்சை பெற வந்தார். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றபோது கார்த்திகாதான் நர்ஸ் என்ற முறையில் கவனித்துக் கொண்டார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அடிக்கடி தனிமையில்
இருவரும் தீவிரமாக காதலித்துள்ளனர். கால் வலி சரியாகி மருத்துவமனையிலிருந்து சீனிக்குமார் திரும்பிய பின்னர் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்த்தார்கள்.

சென்னை திரும்பிய கார்த்திகா
இந்த நிலையில் தனது வேலையை விடும் நிலை ஏற்பட்டது கார்த்திகாவுக்கு. இதனால் சென்னை திரும்பி விட்டார். இங்கு வேறு வேலையில் சேர முயற்சித்தார்.

ஹவுஸ் ஓனர் மகன் சரவணன்
கார்த்திகா குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மகனான சரவணன் என்பவர் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அவர் மூலமாக அங்கு வேலை பெற முயற்சித்தார் கார்த்திகா. இதன் காரணமாக சரவணனுடன் அடிக்கடி பேசினார். அப்போது சரவணன் மீது அவருக்கு காதல் பார்வை திரும்பியது. 2வது காதல் தொடங்கியது.

சீனி நீ வேணாம்....!
சரவணன் போதும் என்று நினைத்த கார்த்திகா, தடாலடியாக சீனிக்குமாருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். சரவணனிடமும் தனது பழைய காதலைச் சொல்லாமல் மறைத்து விட்டார்.

தேடி வந்த சீனி
திடீரென கார்த்திகா பேசுவதை நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்த சீனிக்குமார் போன் செய்து என்ன விஷயம், ஏன் பேசுவதில்லை என்று கேட்டுள்ளார். மேலும் தான் சென்னை வருவதாகவும் கூறினார்.

சித்தி மகளுடன் கிளம்பி வந்த சீனி
சொன்னதோடு நிற்காமல் தனது சித்தி மகளுடன் சென்னைக்கும் வந்து விட்டார். கோயம்பேடு வந்ததும் கார்த்திகாவுக்குப் போன் செய்து வருமாறு கூறியுள்ளார்.

சரவணனுடன் பஞ்சாயத்துப் பேச வந்த கார்த்திகா
இதையடுத்து கார்த்திகா கிளம்பி வந்தார். வரும்போது கூடவே புதுக் காதலன் சரவணனையும் கூட்டி வந்துள்ளார். நான்கு பேரும் உட்கார்ந்து பேசியுள்ளனர். அப்போதுதான் சீனிக்குமார்தான் கார்த்திகாவை முறைப்படி முதலில் காதலித்த காதலன் என்று தெரிய வந்து சரவணன் ஷாக் ஆகி விட்டார்.

கோபத்துடன் கிளம்பிப் போன சரவணன்
கார்த்திகாவின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் கோபத்துடன் கார்த்திகாவைத் திட்டி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிப் போய் விட்டார்.

மறந்து விடச் சொல்லி கிளம்பிய சீனிக்குமார்
சீனிக்குமாரும், சரவணனை கார்த்திகா காதலிப்பதை அறிந்து அதிர்ச்சியுற்று தனது தங்கையுடன் இடத்தைக் காலி செய்தார். மேலும் ஊர் திரும்பியதும் கார்த்திகாவுக்குப் போன் செய்து என்னை இனி மறந்து விடு என்று கூறி விட்டார்.

உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா!
இப்படி முதலில் காதலித்தவரும், 2வதாக காதலித்தவரும் ஒரே சமயத்தில் கைவிட்டு விட்டதால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார் கார்த்திகா. இதனால் விஷஊசி போட்டுக் கொண்டு படுத்து விட்டார். வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications