For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் உடல் கருகி பலியான தமிழக கப்பல் அதிகாரி... தூத்துக்குடியில் சோகம்

மும்பையைச் சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியின் போது பலியான தமிழக அதிகாரியின் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பை கப்பல் தீ விபத்தில் உடல் கருகி பலியான தமிழக வீரர்

    தூத்துக்குடி: மும்பையில் தனியார் கப்பலில் பணிக்கு சேர்ந்த நான்கு மாதத்திலேயே தமிழக அதிகாரி உடல் கருகி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி வடக்கு ராஜதெருவை சேர்ந்தவர் பர்னாந்து. கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த தனியார் கம்பெனிக்கு சொந்தமான எம்டி ஜெனிசா என்ற டேங்கர் கப்பலில் எலக்ட்ரிகல் பிரிவில் முதன்நிலை அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார்.

     Young Officer died in a Tanker Ship Fire Accident

    இந்த கப்பல் கடந்தசில நாட்களுக்கு முன்பு 30 ஆயிரம் டன்டீசலுடன் குஜராத் மாநிலம் காண்டலா துறைமுகத்திற்கு சென்றுள்ளது. கப்பல் துறைமுகம் அருகே வந்த போதுகப்பல் என்ஜின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பர்னாந்து உள்பட 2 பேர் காயம்அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இரவு பர்னாந்து சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார். இதுகுறித்து உடனடியாக பர்னாந்து தந்தைக்கு கப்பல் நிறுவனம் தகவல் தெரிவித்தது. இந்த தகவலை கேட்டஅவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக பர்னாந்து உறவினர்கள் குஜராத்துக்கு புறப்பட்டு சென்று அவரதுஉடலை இன்றுதூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உறவினர்கள், பர்னாந்துக்கு 15ம்தேதியுடன் முடிந்து விட்டநிலையில், அவர் மாலைவரை கூடுதலாக வேலை பார்த்துள்ளார். நள்ளிரவு ஊர் திரும்புவதாக இருந்த நிலையில், இந்த விபத்து நடந்துவிட்டதாக அவர்கள் வேதனைதெரிவித்தனர்.

    English summary
    Young Officer Died in a Fire Accident Which took place in the Oil Tanker Ship. The Officers funeral will take place in his home town Thoothukudi. And FIR is filed regarding the Ship fire Accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X