For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாக்டரிடம் போனில் டவுட் கேட்டு கேட்டு.. பிரசவம் பார்த்த நர்சுகள்.. திருப்பத்தூர் பெண் மரணத்தில் ஷாக்

டாக்டரிடம் டவுட் கேட்டு பிரசவம் பார்த்த அவலம் நடந்துள்ளது

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: இந்த கொடுமையை கேட்டீங்களா... டாக்டர்கிட்ட, டவுட் கேட்டுக்கிட்டே பிரசவம் பார்த்திருக்கிறார்கள் அரசு ஆஸ்பத்திரி நர்ஸ்கள்.. அதனால்தான் இளம்பெண் ஃபரிதா இறந்துவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருப்பத்தூர் டவுன் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்... கஜன்நாயக்கன்பட்டியில் செருப்பு கடை ஒன்றை வைத்திருக்கிறார்.. மனைவி பெயர் பரீதா.. 23 வயதாகிறது.. 3 வயதில் முகமது என்ற குழந்தை இருக்கிறான்.

young woman died during delivery case in tirupattur gov hospital

இப்போது திரும்பவும் பரீதா கர்ப்பமானார்.. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு 2 நாட்களுக்கு முன் விடிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.. அதனால்.. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்த்தனர். ஆனால் தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு கொண்டே இருந்தது. உடன் வந்த சொந்தக்காரர்கள் இதை பார்த்து பயந்துபோய், டியூட்டியில் இருந்த நர்சுகளுக்கு தகவல் தந்தனர்.

"வர்றோம்.. போங்க.. டாக்டர்கள் யாரும் இல்லை" என்று நர்ஸ்கள் பதிலளித்துள்ளதாக தெரிகிறது. "நர்ஸ் மேடம்.. தலை வெளியே தெரியுது.. சீக்கிரமா வாங்க" என்று கூப்பிட்ட பிறகே பரீதாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.. திரும்பவும் உறவினர்கள் ஓடிப்போய் பரீதாவுக்கு மூச்சு திணறுகிறது என்று சொல்லி உள்ளனர்..

சீனா, அமெரிக்காவில் வாட்ஸ் அப் முறை கிடையாது.. இந்தியாவிலும் ஒழிக்க வேண்டும்.. கே எஸ் அழகிரி சீனா, அமெரிக்காவில் வாட்ஸ் அப் முறை கிடையாது.. இந்தியாவிலும் ஒழிக்க வேண்டும்.. கே எஸ் அழகிரி

"டிபன் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்.. சாப்பிட்டுவிட்டு வர்றோம்" என்று அலட்சியமாக பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது. ஆனால், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே பரீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்துதும் உறவினர்கள் கொந்தளித்துவிட்டனர்.. மகப்பேறு அவசர சிகிச்சை மையத்தை முற்றுகையிட்டு போராட்டமும் செய்தனர். இதையடுத்து, ஃபரீதா உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ரத்தினாவதி தலைமையில், இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் (திருப்பத்தூர்) சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அன்று பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்களிடம் 2 கட்டமாக விசாரணை நடத்தினர். 3-ம் கட்ட விசாரணையும் நேற்று முதல் இன்று விடிகாலை வரை நீடித்தது.

இறுதியாக, ஃபரீதாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.. மேலும் பிரசவம் பார்த்தது மொத்தம் நர்சுகள்தானாம்.. பிரசவம் பார்க்கும்போது நிறைய சந்தேகம் வேறு வந்துள்ளது.. அதனால், டாக்டர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, டவுட் கேட்டார்களாம்.. டாக்டர் சொன்னபடி கேட்டு, பிரசவம் பார்த்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறந்த அடுத்த செகண்டே, ஒரு நர்ஸ்கூட அந்த ரூமில் இல்லை.. உடனே பிரசவ வார்டை விட்டு வெளியே போய்விட்டிருக்கிறார்கள்.. முறையான சிகிச்சை ஃபரிதாவுக்கு தராததால்தான் உயிரிழந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல் விசாரணை அதிகாரிகளை மட்டுமல்லாமல், தமிழக மக்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது... சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

English summary
young woman died during delivery case in tirupattur gov hospital and action has taken against it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X