For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஃபேஷன்' என்ற பெயரில் குடித்து சீரழியும் இளசுகள்: போதை தெளிவது எப்போது?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இளம் சமுதாயம் வார இறுதி நாட்கள் வந்தால் குடிபோதையில் தள்ளாடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

படிக்காத பாமர மக்கள் கவலையை மறக்க, உடல் வலியை போக்க என்று பல்வேறு சாக்கு போக்குகளை கூறி மதுபானங்கள் அருந்துகிறார்கள். அதற்கு ஏற்ப மலிவு விலையில் மது கிடைப்பதால் குடித்துவிட்டு போதையில் தள்ளாடுகிறார்கள். அவர்களின் குடும்பம் வறுமையில் வயிறு ஒட்டி வாடுகிறது.

படிக்காதவர்கள் நிலைமை இப்படி என்றால் படித்த இளம் சமுதாயத்தின் நிலையோ படுமோசம்.

வார இறுதி

வார இறுதி

வார இறுதி நாட்கள் அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமை வந்தால் நகரங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர், வேலை பார்க்கும் இளம் வயதினர் பலர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஏன்?

ஏன்?

ஏம்ப்பா இப்படி குடித்து சீரழிகிறீர்கள் என்று கேட்டால் படிப்பு டென்ஷன், வேலை டென்ஷனை போக்கவே குடிப்பதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள் குடிக்க ஏதாவது சாக்கு வேண்டும்.

நல்லா இருப்போரும்

நல்லா இருப்போரும்

இப்படி குடித்துவிட்டு ஆட்டம் போடும் இளசுகள் தங்களின் நண்பர்களையும் வற்புறுத்தி குடிக்க வைக்கிறார்கள்.

நாமும் குடித்தால்

நாமும் குடித்தால்

சுற்றி இருக்கும் நண்பர்கள், தோழிகள் எல்லாம் குடிப்பதை பார்க்கும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் நாமும் குடித்தால் என்ன என்று மது குடிக்கத் துவங்கிவிடுகிறார்கள்.

வெட்கமே இல்லாமல்

வெட்கமே இல்லாமல்

இளம் பெண்கள் குடித்துவிட்டு போதையில் ஆடுவது, ஆடைகளை அவிழ்ப்பது, மயங்கி விழுந்து பிறர் தூக்கி வந்து வீட்டில் விடும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள்.

வேறு வழியே இல்லையா

வேறு வழியே இல்லையா

வாழ்க்கையை அனுபவிக்க, டென்ஷன், கவலையை போக்க மதுவை விட்டால் வேறு வழியே இல்லையா என்ன?

English summary
Students and young professionals turn towards liquor to relax themselves during weekends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X