For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்

மாட்டிறைச்சி திருவிழாவுக்கு அழைப்பு விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கும்பகோணம்: "வாங்க.. எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடலாம்" என்று ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்த இளைஞரை போலீசார் கொத்தாக தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிட்டனர்.

போன வாரம் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவர், பீஃப் சூப் குடித்துவிட்டு, தான் குடித்ததை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர் அவரை வீட்டுக்குள் புகுந்து அரிவாள், கத்தியால் தாக்கினர்.

ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க!!ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க!!

நாகை இளைஞர்

நாகை இளைஞர்

தற்போது அந்த இளைஞர் சிகிச்சையில் இருக்கிறார். இது சம்பந்தமாக போலீசும் மறுநாளே சம்பந்தப்பட்ட 4 பேரை பிடித்து கைது செய்தது. ஆனால் இந்த இளைஞருக்கு ஆதரவாக, #beef4life , #WeLoveBeef , # BeefForLife ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகின.

எழிலன்

எழிலன்

இந்நிலையில் மற்றொரு மாட்டிறைச்சி சம்பவம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டு கொரப்பு பகுதியை சேர்ந்தவர் எழிலன். இவர் தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனர் என்று சொல்லப்படுகிறது.

திருவிழா

திருவிழா

மாட்டுக்கறி சாப்பிடும் திருவிழா நடைபெற உள்ளதாக இவர், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த விழாவில் எல்லாருமே பங்கேற்கலாம் என்றும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் இந்த திருவிழாவில் அழைப்பு விடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் எந்த தேதியில் திருவிழா என்று சொல்லவில்லை.

3 பிரிவுகளில் வழக்கு

3 பிரிவுகளில் வழக்கு

இந்துக்களுக்கு எதிரான பதிவுகளையும் வெளியிட்டிருந்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தாலுக்கா போலீசார், தனிப்பட்ட நபர்களின் மத உணர்வுகளை புண்புடுத்தி, கலவரத்தை தூண்டுதல், அமைதியை குலைப்பது உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இன்று காலை எழிலனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இறுதியில் சிறையில் அடைத்தனர்.

English summary
Youth arrested for posting invitation for beef festival on facebook near Kumbakonam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X