For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவு கேட்டு வந்த மூதாட்டியை கட்டி கடலில் வீசிய இளைஞர்கள்.. குமரியில் அரங்கேறிய கொடூரம்

நாகர்கோவில் அருகே மூதாட்டி ஒருவரை குழந்தை கடத்த வந்ததாக கூறி இளைஞர்கள் கடலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உணவு கேட்டு வந்த மூதாட்டியை கடலில் வீசிய இளைஞர்கள்-

    கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே மூதாட்டி ஒருவரை குழந்தை கடத்த வந்ததாக கூறி இளைஞர்கள் கடலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மணக்குடியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீடுகளை நோட்டமிட்டு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவி வருகிறது.

    Youths thrown old woman into sea at Kanniyakumari

    இந்நிலையில் மூதாட்டி ஒருவர் மணக்குடியில் ஒவ்வொரு வீடாக சென்று பசிக்கு உணவு கேட்டுள்ளார். ஆனால் மூதாட்டி குழந்தைகளை கடத்த நோட்டமிடுவதாக கூறி அப்பகுதி இளைஞர்கள் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்தனர்.

    பின்னர் அந்த மூதாட்டியை கடலில் தூக்கி வீசினர். இதனை பலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    Youths thrown old woman into sea at Kanniyakumari

    மேலும் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மூதாட்டி என்றும் பாராமல் இளைஞர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Youths thrown a old woman in the sea suspecting that she is kidnapping children in Kanniyakumari. This video became viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X