For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் தமிழர்கள் அசத்தலாக கொண்டாடிய காதலர் தினம் ! உருக வைக்கும் காரணம்

Google Oneindia Tamil News

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் மாநகரில் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள் அதன் மூலம் அசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி அளித்தார்கள்.

அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் மாநகரில் கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் கிளை தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டி தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் அரசு பள்ளிகளில் ஏபிசி எனும் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

 Tamils celebrated Valentines Day in America

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் காதலர் தினம் பிப்ரவரி மாதம் ஹூஸ்டன் நகரில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 80 வயது சதாபிஷேகம் முடித்த மூத்த தம்பதிகள் மற்றும் பிற மூத்த தலைவர்களை கவுரவித்து இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டது அதுமட்டுமில்லாமல் இளைஞர்கள் ஆடல் பாடல்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரவாரமாக கொண்டாடப்பட்டது.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி , பேச்சு, பாட்டு மற்றும் பலவித விளையாட்டுக்களை கொண்டு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொண்டு வந்து கலந்து சாப்பிட்டனர். 5 கே மரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ் பாடல்களை கணவனும் மனைவியும் காதல் ஜோடியாக சேர்ந்து பாடி மகிழ்ந்தனர். நீ பாதி நான் பாதி உண்ணும் போட்டியில் கலந்து கொண்டாடினர்.

 Tamils celebrated Valentines Day in America

ஏப்ரல் மாதம் 4th / 5th தேதியில் திருக்குறள் திருவிளையாட்டு மற்றும் மே மாதம் 3 ஆம் நாளில் அன்னையர் தின நிகழ்ச்சிக்காக நிதி திரட்டும் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் இந்நிகழ்ச்சிகள் மூலம் பங்கேற்று நம் தமிழகத்திற்கு நிதியளித்து நம் தமிழகத்தில் உள்ள குழந்தைகளை படிக்க உதவுமாறு தமிழக அரக்கட்டளை கேட்டுக்கொண்டது. தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை சார்பாக திருமதி மாலா கோபால், நளினி பாலச்சந்தர் மற்றும் புனிதா தங்கராஜ் ஆகியோர் நெகிழ்ச்சியான நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி கூறினர்.

English summary
Tamils celebrated Valentine's Day in America, some reason behind
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X