For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்ப்பொரேட்களுக்கு மொத்த இந்தியருமே இரை... 10% இடஒதுக்கீட்டிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: 3 சதவீதம்கூட இல்லாத மேல்சாதியர்க்கு 10 சதவீதம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளித்து, இட ஒதுக்கீட்டையே மோடி ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இயற்கைக்கும் அறத்திற்கும் எதிராக, பிறப்பால் மனிதரைத் தரம் தாழ்த்தி இழிவு செய்யும் சாதியத்தை தனது மரண தறுவாயிலும் வலுப்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு.

ஏனென்றால் இன்னும் மூன்று மாதத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் அகற்றப்பட்டு விடுவோம் என்பது அதற்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு (மேல்சாதியினர்) அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124ஆவது திருத்தம் செய்யும் மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது.

பி.ஆர்.அம்பேத்கர் செய்தார்

பி.ஆர்.அம்பேத்கர் செய்தார்

இதற்காக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் இட ஒதுக்கீடு கோரப்பட்டு, அதற்காகத்தான் அரசமைப்புச் சட்டத்தில் முதன்முதலில் திருத்தமே மேற்கொள்ளப்பட்டது. பெரியார் சொன்ன அந்த திருத்தத்தை பிரதமர் நேருவும் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் செய்தனர். அப்போது பொருளாதார அளவுகோலும் நீட்டப்பட்டது.

ஆணை செல்லாது

ஆணை செல்லாது

பிறகு மண்டல் குழு பரிந்துரைகள் விவாதத்தின்போது, 1992ல் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருக்கையில், மேல்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆணை கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான இந்திரா - சகானி என்ற அந்த வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது; 13(1), 14, 15, 15(4) ஆகிய சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, மேல்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆணை செல்லாது என்றது.

கவல் அறியும் உரிமைச் சட்டம்

கவல் அறியும் உரிமைச் சட்டம்

2016ல் மோடியின் சொந்த குஜராத் மாநிலத்தில், மேல்சாதியினர் இட ஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டமே (Ordinance) கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்த வழக்கிலும் அந்த அவசரச் சட்டம் செல்லாது என்றே தீர்ப்பு கூறப்பட்டது. மண்டல் பரிந்துரைகள் அமலுக்கு வந்து 23 ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 12 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்கள்தான் கிடைத்திருக்கிறது என்பதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்.

மொத்த இந்தியருமே இரை

மொத்த இந்தியருமே இரை

சூழ்ச்சிகர பாஜகவும் அதன் சூதுமிகு பிரதிநிதியுமான நரேந்திர தாமோதர தாஸ் மோடியும் மனித மாண்புகளுக்குப் வேண்டும். ஏனென்றால் பிரதமர் மோடியால் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கார்ப்பொரேட்களுக்கு மொத்த இந்தியருமே இரையாக்கப்படுகிறார்கள்.

உரக்கச் சத்தமிட்டு எச்சரிக்கை

உரக்கச் சத்தமிட்டு எச்சரிக்கை

அதேபோல்தான் இப்போது, 3 சதவீதம்கூட இல்லாத மேல்சாதியர்க்கு 10 சதவீதம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளித்து, இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டப் பார்க்கிறார். ஆனால் நீதிமன்றம் செல்லும்போது இது சட்டப்படி செல்லாததாகிவிடும் என்பதுதான் இருக்கும் ஒரே ஆறுதல். ஆனாலும் உரக்கச் சத்தமிட்டு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

English summary
Tamizhaga valvurimai katchi has strongly criticized Modi for slashing reservation by giving 10 per cent education and employment for upper caste who are not even 3 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X