For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Teachers' day: நாட்டுக்கு தேவை நிறைய நல்லாசிரியர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று ஆசிரியர் தினம்.. கல்வி போதனை முதல் வாழ்க்கை கல்வி வரை நமக்கு சொல்லிக் கொடுக்கும் பிதாமகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம். முன்பை விட இப்போதுதான் ஆசிரியர்களின் பணி மிகவும் சவாலாக இருக்கிறது. பல சவால்களையும் தாண்டித்தான் ஒவ்வொரு பிள்ளையையும் உருவாக்கி செதுக்கி வருகிறார்கள் ஆசிரிய சிற்பிகள்..

ஆசிரியப் பணி என்பது அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பது போல நம் நாட்டின் எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. ஆசான் சரியாக அமைந்தால் குழந்தைகளின் எதிர்காலமும் சரியாக அமையும். கல்வியை கற்பிக்க பல வழிமுறைகளைப் பி்ன்பற்றுபவர்கள் ஆசிரியர்கள்.

Teacehrs day is being celebrated today and here is a special story.

பெற்றால் தான் பிள்ளை என்றில்லை ஆசிரியர்கள் தங்கள் மாணாக்கர்களை தங்கள் பிள்ளைகளைப் போலவே கருதுவர். அன்புக் காட்டுவதில் அன்னையாக கண்டிப்பதில் தந்தையாக நம்முடைய ஆசிரியர் இருப்பார். நமக்கு நல்ல பழக்கவழக்கங்களையும் நன்னெறி்க்கதைகளையும் கூறி நல்வழிப் படுத்துவார். அ என்னும் அகரத்தில் ஆரம்பித்த இது போல ஒரு கட்டுரையை எழுத வைப்பதிலும் ஆசிரியரின் பங்கு அளப்பரியது.

எழுத்தறிவித்தவன் இறைவான் ஆவான் என்பது போல கடவுளுக்கு நிகராகப் போற்றப்பட வேண்டியவர்கள் நம் ஆசிரியர்கள். பிள்ளைகளுக்கு விளையாட்டு வடிவில் பட வடிவில் கதை வடிவில் பாடங்களை நடத்துகின்றனர். படிக்காதப் பிள்ளைகளும் நல்லாசிரியர் அமைந்தால் தன்னால் படிப்பார்கள். எத்தனை முறை புரியவில்லை என்றாலும் சளைக்காமல் கற்றுக் கொடுப்பதில் வல்லவர்கள்.

தேசத்தை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது #OurTeachersOurHeroesதேசத்தை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது #OurTeachersOurHeroes

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் பெற்றவர்களுக்கு நிகராக நம் வளர்ச்சியைப் பார்த்து மகிழக் கூடியவர்கள் ஆசிரியர்கள். இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நம்முடைய அப்துல் கலாம் ஐயா வும் மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கவே விரும்பினார். எதிர்கால இந்தியாவை திறம்பட உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்.

சோதனைக் காலங்களில் கூட தங்கள் மாணவர்களுக்காக ஆன்லைனில் வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நல்ல ஆசிரியர் என்பவர் ஒரு மாணவருக்கு இன்னொரு தாய் போல இருக்க வேண்டும். அவர்களை இந்த நன்னாளில் போற்றுவோம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சிறந்த ஆசிரியர் நிச்சயம் இருப்பார். அவர்களை இந்நாளில் நினைவுகூறுங்கள்.

''காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்''.. வைரமுத்துவின் ஆசிரியர் தின வாழ்த்து!''காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்''.. வைரமுத்துவின் ஆசிரியர் தின வாழ்த்து!

Recommended Video

    Trichy க்கு கையில் Hall Ticket உடன் வந்த Sai Pallavi

    உங்களை உற்சாகப்படுத்துவார் உங்களுக்குப் பக்கபலமாக நிற்பார் உங்களுடைய வளர்ச்சிக்குப் பாடுபடுவார் உங்கள் ஆசிரியர். குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹஃ குரு சாட்சாத் பரப்ரும்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ என்பதற்கேற்ப நமக்கு எல்லாமுமாக இருக்கும் நம் ஆசிரியர்களைப் போற்றுவோமாக. அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

    English summary
    Teacehrs' day is being celebrated today and here is a special story.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X