மத்திய நெடுஞ்சாலைத்துறை 100 கோடி செலவில் அமைத்த ‘அணைக்கரை பாலம்’ திடீரென இடிந்து விழுந்தது!
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கட்டப்பட்டு வந்த அணைக்கரை பாலம் இடிந்து விழுந்தது.
சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல விக்கிரவாண்டி வழியாக, பண்ருட்டி, மீன்சுருட்டி வழியாக கும்பகோணம் செல்வது சுலபமான வழியாக இருந்தது.
கொள்ளிடம் ஆற்றைக் கடந்துதான் கும்பகோணத்தை சென்றடையமுடியும். அணைக்கரை என்ற ஊரில் இருக்கும் கீழ் அணை பாலம் உறுதித்தன்மை இல்லாததால், பல வருடங்களாக போக்குவரத்துப்பாதையாக பயன்பாட்டில் இருந்த கீழணையின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புனித் ராஜ்குமாரின் கனவிற்காக.. அமேசான் நிறுவனம் செய்த செயல்.... ரசிகர்கள் நெகிழ்ச்சி

அணைக்கரை
இதனால், சென்னையில் இருந்து வருபவர்கள் கங்கை கொண்ட சோழபுரம் வரை சென்று மீண்டும் கும்பகோணத்துக்குள் வர வேண்டும். இது மிகவும் சுற்றுப்பாதையாக அமைந்தது. மேலும், கீழணை பழைய பாலத்தில் போக்குவரத்து தடைபட்டதால், அந்த வழியாக அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்லவோ, ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நடந்து வந்து, அங்கு காத்திருக்கும் பேருந்தில் ஏறி கும்பகோணம் செல்வார்கள்.

பாலம்
முக்கொம்பு அணை போல், இந்த அணைக்கரை கீழ் அணையும் விழுந்துவிட்டால் பொதுப்பணித்துறை பதில் சொல்லவேண்டும் என்பதால். கீழணையில் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுடன் இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் மேல் புதிதாக பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நெடுஞ்சாலைத்துறையின் நாற்கர திட்டத்தின் மூலம் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 'அணைக்கரை பாலம்' இடிந்து விழுந்தது.

இடிந்தது
பழைய பாலத்திற்கு பதில் புதிய பாலம் வெகு நாட்களாக கட்டப்பட்டு வந்தது. போக்குவரத்தை இயல்புநிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று, விரைவில் பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்று அணைக்கரை பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் பாலம் வேலை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. கொள்ளிடம் ஆற்றின் மேல் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பால பணிகள் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் என இடிந்தது விழுந்தது.

கீழணை
தஞ்சை, அரியலுார் மாவட்டங்களை இணைக்கும் அணைக்கரை பாலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, 1836ல் சர் ஆர்தர் கார்டன் என்பவரால் கீழணை கட்டப்பட்டது. ஒன்பது அடி நீர் தேக்கம் கொண்ட கீழணையில், 150.13 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது.அணையுடன் கூடிய பாலமாக விளங்கும் இந்த கீழணை தான் சென்னை - கும்பகோணம் வழித்தடத்தின் முக்கிய இணைப்பு பாலம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீர் ஆதாரமாக, 182 ஆண்டுகளுக்கு மேல் விளங்கிய இப்பாலம் வலுவிழந்ததால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.