தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாரணாசிக்கு போகிறோம்… மோடிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்வோம்… அய்யாக்கண்ணு பேச்சு

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை தலைநகரில் முன்னெடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

111 Tamilnadu farmers will file nominations against Modi: Ayyakannu talks

சமீபத்தில், நடந்த 5 மாநில தேர்தலில் கூட விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரம் பாஜகவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது. அந்தவகையில், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா?அவசரப்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எச்.ராஜா.. தமிழிசை மேடமின் ரியாக்சன் என்ன தெரியுமா?

இந்த நிலையில், தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அய்யாக்கண்ணு, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் இருந்து 1100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரணாசி செல்ல உள்ளதாகவும் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம்,விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் அறிக்கை அமைய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டார்.

English summary
Lok Sabha elections 2019: 111 tamilnadu farmers will file nominations against Modi says Ayyakannu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X