• search
தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பட்டப்பகலில்.. நடுதெருவில்.. பேங்க் வாசலில் தீயில் பற்றி கொண்டு எரிந்த ஆனந்த்.. அதிர்ந்த மக்கள்!

|

தஞ்சை: தஞ்சையில் வீட்டு வங்கி கடன் கேட்டு அழுத்தம் தந்ததால், பேங்க் வாசலிலேயே பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளித்த நபர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். "யாருடனும் பேசல.. கண் மட்டும் கலங்கிக்கிட்டே இருந்தது... பணத்துக்காக வெயிட் பண்றாருன்னுதான் நினைச்சோம்.. இப்படி பெட்ரோலை எடுத்து ஊத்தி கொளுத்திப்பாருன்னு தெரியல" என்று வங்கி ஊழியர்கள் கண்கலங்கி சொல்கிறார்கள்.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்.. 40 வயதாகிறது.. இவரது மனைவி ஹேமா... இவர்களுக்கு 8, 4 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள்.. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஆனந்துக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போயுள்ளது.

40 year old man set fire on himself in front of bank and died in tanjore

அதனால் சொந்த ஊருக்கு வந்து, வெல்டராக வேலை பார்த்துள்ளார்.. வல்லம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு தனியார் பேங்கில் 2015-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.. அதில், வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சம் திருப்பியும் செலுத்தி விட்டார்.. ஆனால் வங்கி தரப்பில் இன்னும் ரூ.6 லட்சம் கடன் தொகை நிலுவையில் இருப்பதாகவும், அந்த கடனை உடனே செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது.. இந்த நோட்டீஸை பார்த்து ஆனந்த் பதறி போய்விட்டார்.

"கொஞ்சம் டைம் கொடுங்கள் எப்படியாவது கட்டிடறேன்.. இப்போதைக்கு எங்களால முடியாது.. லாக்டவுனில் வீட்டில் இருக்கேன்... வேலையும் இல்லை.. கையில் காசும் இல்லை" என்று சொல்லியும் வங்கி நிர்வாகம் ஏற்கவில்லை என தெரிகிறது.. ஏனென்றால், 3 வருஷமாகவே இவர் சரியாக கடன் தொகையை கட்டவில்லையாம். இதனால் பல இடங்களில் கடன் கேட்டும் அந்த பணமும் கைக்கு வந்து சேரவில்லை.. நேற்று தான் வீட்டை ஏலம் விடப்போவதாக சொல்லியிருந்தனர்.

அதனால் கடைசியாக ஒருமுறை பேங்கில் பேசி, டைம் கேட்கலாம் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.. அப்போதும், பேங்கில் ஒப்புக் கொள்ளவில்லை.. ஏமாற்றம் அடைந்ததால், பேங்க்கில் உள்ள சேரிலேயே ரொம்ப நேரமாக சோர்வுடன் உட்கார்ந்திருக்கிறார்.. கண்கள் கலங்கியவாறே இருந்திருக்கிறது. யாருடனும் பேச காணோம்.

இதனால், பணத்துக்காகத்தான் இப்படி காத்து கொண்டிருக்கிறார் போலும் என்று பேங்கில் உள்ளவர்கள் நினைத்து கொண்டார்கள். அதற்கு பிறகுதான் சாயங்காலம் பேங்கை விட்டு வெளியே வந்தவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றில் இருந்து பெட்ரோலை எடுத்து திடீரென உடம்பில் ஊற்றி தீக்குளித்து விட்டார்.

அதிகம் சாப்பிடாதே.. 2 வயது குழந்தையின் வயிற்றில் குத்தி, சூடு வைத்த கொடூர பாட்டி.. பெங்களூரில் ஷாக்!

பட்டப்பகலில்.. நடுதெருவில்.. பேங்க் வாசலில் தீயில் பற்றிக் கொண்டு எரிந்த நபரை பார்த்து பொதுமக்கள் அலறினர்.. விஷயம் அறிந்து ஆனந்த் மனைவியும் ஓடிவந்து கதறி துடித்தார்.. பிறகு ஆனந்த்தை மீட்டு உடனடியாக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அப்போதே 50 சதவீதத்துக்கு மேல் உடல் எரிந்துவிட்டது.. தீவிரமான சிகிச்சையும் அவருக்கு தரப்பட்டது.. ஆனால் ஆனந்த் சீரியஸாக இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது குறித்து வல்லம் போலீஸாரும் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

 
 
 
English summary
40 year old man set fire on himself in front of bank and died in tanjore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X