தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"எனக்கு வேற வழி தெரியலம்மா".. உடல் வெந்து கதறிய கணவர்.. பேங்க் வாசலில் கொடூரம்.. அதிர்ச்சியில் தஞ்சை

வீட்டு வங்கி கடனை கேட்டு அழுத்தம் தந்ததால், நபர் ஒருவர் தீக்குளித்துவிட்டார்

Google Oneindia Tamil News

தஞ்சை: "ஏன் இப்படி பண்ணிட்டீங்க" என்று மனைவி கதறி துடித்து பதறியபடி கேட்க.. . "எனக்கு வேற வழி தெரியலம்மா" என்று உடம்பெல்லாம் தீயில் வெந்து கொண்டே கணவன் சொன்ன பதில் அனைவரின் இதயத்தையும் பிழிந்தெடுத்துவிட்டது.. வீட்டு வங்கி கடன் கேட்டு அழுத்தம் தந்ததால், பேங்க் வாசலிலேயே.. ஒருவர் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளித்துவிட்டார்.. இந்த அதிர்ச்சி சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது!

இந்த லாக்டவுன் காலத்தில் ஹவுஸ் ஓனர்கள், வாடகைக்கு குடியிருப்போரிடம் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்று தமிழக அரசும், கோர்ட்டும் தெரிவித்திருந்தது.

 40 year old man set fire on himself in front of bank in loan issue near tanjore

அதேசமயம், இந்த வாடகையை நம்பிதான் நிறைய பேர் பிழைப்பு ஓட்டி வருகிறார்கள்.. அதனால், அவர்கள் நிலைமையும் பரிதாபம்தான்.. சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலையில், வாடகை தர முடியாதவர்கள் நிலைமையும் அதைவிட பரிதாபம்தான்.. வாடகை கேட்பதாலேயே ஹவுஸ் ஓனர்களை வெட்டி படுகொலை செய்த சம்பவங்களும் பெருகி வருகின்றன.

இதுபோலவே மற்றொரு பிரச்சனை வங்கி கடனை செலுத்துவது.. எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டது... எனினும், இது தொடர்பான விவகாரமும் ஆங்காங்கே வெடித்து வருகிறது. வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதல், அந்த வீட்டை ஏலத்தில் விடப்போவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.. இதனால் மனம் உடைந்த ஒரு நபர் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து விட்டார்.

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்.. 40 வயதாகிறது.. இவரது மனைவி ஹேமா... இவர்களுக்கு 8, 4 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள்.. ஆனந்த் வெல்டராக வேலை பார்க்கிறார்..

வல்லம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு தனியார் பேங்கில் 2015-ல் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூ.9 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.. அதில், வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சம் திருப்பியும் செலுத்தி விட்டார்.. ஆனால் வங்கி தரப்பில் இன்னும் ரூ.6 லட்சம் கடன் தொகை நிலுவையில் இருப்பதாகவும், அந்த கடனை உடனே செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது.. இந்த நோட்டீஸை பார்த்து ஆனந்த் பதறி போய்விட்டார்.

அதனால் பேங்குக்கு ஓடிவந்தார்... மேனேஜர், அங்கிருந்த ஊழியர்களிடமும், கொஞ்சம் டைம் கொடுங்கள் எப்படியாவது கட்டிடறேன்.. இப்போதைக்கு எங்களால முடியாது.. லாக்டவுனில் வீட்டில் இருக்கேன்... வேலையும் இல்லை.. கையில் காசும் இல்லை என்று சொல்லி உள்ளார்.

ஆனால், பேங்கில் யாரும் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.. டைம் தரவும் முடியாது என்று சொல்லி, உடனே பணம் கட்ட வேண்டும் என்று அழுத்தம் தந்துள்ளனர்.. இதனால் மனம் உடைந்த ஆனந்த், பேங்கை விட்டு வெளியே வந்தார்.. பிறகு அந்த பேங்க் வாசலிலேயே உடலில் பெட்ரோலை ஊற்றி தீயையும் வைத்து கொண்டார்.

பட்டப்பகலில்.. நடுதெருவில்.. பேங்க் வாசலில் தீயில் பற்றிக் கொண்டு எரிந்த நபரை பார்த்து பொதுமக்கள் அலறினர்.. அவரை காப்பாற்ற போராடினர்.. அதற்குள் விஷயம் அறிந்து ஆனந்த் மனைவி ஓடிவந்தார்.. "ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டீங்க" என்று கதறி கொண்டே கேட்டார்.. "எனக்கு வேற வழி தெரியலம்மா" என்று ஆனந்த் உடம்பெல்லாம் நெருப்பு பற்றி கொண்டே தீயில் வெந்தபடி சொன்னது, அங்கிருந்தோரை கண்கலங்கி அழ வைத்துவிட்டது.. பிறகு எல்லாருமாக சேர்ந்து தீயை அணைத்து, உடனடியாக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிரமான சிகிச்சை அவருக்கு தரப்பட்டு வருகிறது.. ஆனால் ஆனந்த் சீரியஸாக இருக்கிறாராம்!

இது குறித்து வல்லம் போலீஸாரும் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.. உடனே பணம் கட்டவில்லை என்றால், வீட்டை ஏலத்தில் விட்டுவிடுவோம் என்று பேங்கில் தெரிவித்து வந்துள்ளனர்.. எத்தனையோ முறை கையில் காசு இல்லை என்று சொல்லியும், வங்கியில் ஏற்கவில்லையாம்.. நிறைய இடங்களில் கடன் கேட்டும், அந்த கடன்தொகையும் கைக்கு வந்து சேரவில்லை.

இன்றுதான் அதாவது 28-ம்தேதி தான் வீட்டை ஏலம் விட போவதாக சொல்லி உள்ளனர்.. அதனால், கடைசியாக ஒருமுறை போய் பேசிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு நேற்று காலை கிளம்பி போயுள்ளார் ஆனந்த்.. அங்கு ஏமாற்றம் அடைந்ததால், பேங்க்கில் உள்ள சேரிலேயே ரொம்ப நேரமாக சோர்வுடன் உட்கார்ந்திருக்கிறார்.. யாருடனும் பேச காணோம்.. அதற்கு பிறகுதான் சாயங்காலம் பேங்கை விட்டு வெளியே வந்தவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றில் இருந்து பெட்ரோலை எடுத்து திடீரென உடம்பில் ஊற்றி தீக்குளித்துள்ளார் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

English summary
A 40-year-old man set himself ablaze in front of bank near Tanjore because of loan issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X