• search
தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

220 ஆண்டுகள் பழமை.. 8 தலைமுறை.. பூட்டப்படாத கதவுகள் கொண்ட வீடு.. தஞ்சையில் வரலாற்று பொக்கிஷம்!

|

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பூட்டப்படாத கதவுடன் கூடிய வீட்டில் 220 ஆண்டுகளாக 8 தலைமுறையை சேர்ந்தவர்கள் வசித்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

  220 ஆண்டுகள் பழமை.. 8 தலைமுறை.. பூட்டப்படாத கதவுகள் கொண்ட வீடு | Oneindia Tamil

  தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா கண்டியூர்- திருக்காட்டுப்பள்ளி சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் காவிரி கிளை ஆறான குடமுருட்டி ஆறு. இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது நடுக்காவேரி கிராமம்.

  பாரம்பரியமாக விவசாயத்தை மட்டுமே செய்து வரக் கூடிய மக்கள் இங்கு பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்துமே பழமையான சுண்ணாம்பு காரை செங்கல் கற்களால் கட்டப்பட்ட வீடுகள்.

  இந்தி தெரியாது போடா.. பல லட்சம் டி-ஷர்ட்.. வெளிநாட்டிலிருந்து கூட குவியும் ஆர்டர்.. திருப்பூரில் செமஇந்தி தெரியாது போடா.. பல லட்சம் டி-ஷர்ட்.. வெளிநாட்டிலிருந்து கூட குவியும் ஆர்டர்.. திருப்பூரில் செம

  கட்டப்பட்ட வீடு

  கட்டப்பட்ட வீடு

  தற்போது பல வீடுகள் சேதம் அடைந்து அதனை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு சில வீடுகள் மட்டுமே பழமை தாங்கி நிமிர்ந்து நிற்கின்றன. இப்படி 1898-ஆம் ஆண்டு புன்னக்குஆய் என்ற பெண்மணியால் பெண்களாக இணைந்து கட்டப்பட்ட வீடுதான் யோக புலி நாட்டார் பரம்பரை வீடு.

  8 தலைமுறைகள்

  8 தலைமுறைகள்

  வீர நாட்டார் என்பவருக்காக புன்னக்குஆய் என்ற பெண்மணியால் கட்டப்பட்ட இந்த வீடு முன்புறம் பின்புறம் என இரண்டு முக்கிய நிலைகளை கொண்டு இரண்டு அடி அகல சுண்ணாம்பு காரை சுட்ட கல்லால் கட்டப்பட்ட வீடு. இந்த வீட்டில் கடந்த 220 ஆண்டுகளாக அதாவது எட்டு தலைமுறையாக ஒன்றாக வாழ்ந்து வரக் கூடிய மக்கள் தங்கள் முன்னோர்கள் எப்படி இந்த வீட்டை வைத்து இருந்தார்களோ அப்படியே இன்னும் பராமரித்து வருகின்றனர்.

  வெள்ளம்

  வெள்ளம்

  காவிரிக்கரையில் அமைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வரலாம் என்ற எண்ணத்தில் எட்டடி உயரத்தில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இரண்டு பெரிய பெரிய திண்ணைகள் 50 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் வீட்டில் உள்ள யாரும் வீட்டை காலி செய்துவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியே சென்றுவிடக் கூடாது என்ற நோக்கம்.

  முன்னோர்கள்

  முன்னோர்கள்

  யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம் என்ற எண்ணத்தில் முன்புறம் மற்றும் பின்புற கதவுக்கு தாழ்ப்பாள் என்பதே அமைக்கப்படாமல் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட வீடுகள் இத்தனை தலைமுறைகள் ஆகியும் தங்கள் முன்னோர்கள் இதுவரை தாழ்ப்பாள் அமைக்காமல் கட்டிய அதே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

  கருங்கல்

  கருங்கல்

  பல தலைமுறையினர் சென்னை, பெங்களூர், வெளிநாடு என வேலைக்குச் சென்று விட்ட போதிலும் அந்த வாரிசுகளில் எவரேனும் ஒருவர் அங்கு வாழ்ந்து கொண்டுதான் வருகின்றனர். இந்த வீட்டில் நுழைந்தவுடன் பழமையான நெல் கொட்டும் குதிர் உலக்கை உரல் பெரிய அளவிலான கருங்கல்லால் ஆன ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவை இவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.

  ஒற்றுமை

  ஒற்றுமை

  மேலும் இந்த வீட்டை யாரும் பாகப்பிரிவினை செய்து விடக்கூடாது என்பதற்காக வீட்டிற்கு ஒருபுறம் படுக்கை அறை மறுபுறம் சமையலறையில் அமைத்துள்ளதாக கூறுகின்றனர். அந்த வீட்டில் உள்ள பெண்கள் மத்தியில் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட கூடிய இந்த வீடு ஒரு வரலாற்று நிகழ்வாகவே அவர்களால் பார்க்கப்படுகிறது.

   
   
   
  English summary
  A house which was built 220 years ago. 8 generations are living in this house near Tanjore.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X