தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அழிந்து வரும் கிளி மூக்கு, விசிறி வால் சேவல்.. மீட்டெடுக்க தஞ்சையில் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி!

Google Oneindia Tamil News

தஞ்சை: அழிந்து வரும் பாரம்பரிய இனமான கிளி மூக்கு, விசிறி வால் சேவல்களை மீட்டெடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வகை சேவல்களுக்கான கண்காட்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டையில் உக்கடை எஸ்டேட் சார்பில் கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இதில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சேவல் வளர்ப்பவர்கள் தங்கள் சேவல்களோடு ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சேவல்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டன. நல்ல அழகான மூக்கு கொண்ட முதல் தரத்தில் இருக்கும் 5 சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு எல்.இ.டி. டி.வி பரிசளிக்கப்பட்டது. மேலும் அழகான மயில் போன்ற விசிறி வால் கொண்ட 5 சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆன்டிராய்டு மொபைல் பரிசாக வழங்கப்பட்டது.

"கை" எப்படி இருக்கு.. அப்படியே கருணாநிதி போல ஸ்டாலினும்.. காங். எம்பியின் பெருமிதம்!

கிளி மூக்கு

கிளி மூக்கு

போட்டியில் கலந்து கொண்ட சேவல்களுக்கு சுமார் 1 லட்சம் அளவிலான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த விஸ்வநாதன் என்பவர் கூறுகையில், கிளி மூக்கு, விசிறி வால் ஒரு வகையை சேர்ந்தது.

கிளி மூக்கு

கிளி மூக்கு

கிளி மாதிரி அழகான மூக்கு, மயில் மாதிரி அழகான வால் கொண்டது இதன் சிறப்பம்சமாகும். தமிழர்களின் பாரம்பரியமான இந்த சேவல்களின் பூர்வீகம் தமிழ்நாடுதான். இங்கிருந்து இவை மற்ற மாநிலங்களுக்கும் பரவியிருக்கிறது.

அழியும் நிலை

அழியும் நிலை

இந்த வகை சேவல்கள் சண்டைக்கு பயன்படுத்துவது இல்லை. இவை அழகிற்காக மட்டுமே ஒரு குழந்தை போல் நம் முன்னோர்கள் வளர்த்து வந்துள்ளனர். பல பேர் இந்த சேவலை வளர்த்து வந்தாலும் இவை தற்போது அழியும் நிலையில் உள்ளது.

வளர்ப்பு

வளர்ப்பு

இப்படியே சென்றால் எதிர்காலத்தில் இப்படி ஒரு சேவல் வகை இருந்ததே யாருக்கும் தெரியாமல் போய்விடும். எனவே இது போன்ற கண்காட்சி நடத்துவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பலர் இவற்றை வளர்ப்பதற்கு ஆர்வமுடன் முன் வருவார்கள்.

விற்பனை

விற்பனை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இது போன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது நல்ல லாபம் தர கூடிய தொழிலாகவும் இருக்கும். நல்ல தரமான செழுமையான சேவல்கள் ரூ 5,000 தொடங்கி 2 லட்சம் வரை விற்பனை ஆகிறது. கோழி ரூ 2,000 முதல் 1 லட்சம் வரை விற்பனையாகிறது என்றார் அவர்.

English summary
Rare roaster exhibition was conducted in Tanjore. parrot nose roaster and more are seen in this exhibition. Prizes also distributed for owners of the roasters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X