தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சின்னம்மா" இறந்த.. ஸாரி.. "அம்மா" இறந்த ஈரம் கூட காயலை.. டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரச்சாரத்தில் டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்-வீடியோ

    பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பிரசாரம் செய்த போது ஜெயலலிதா இறந்து.. என்பதற்கு பதிலாக சசிகலா இறந்து என வாய்த் தவறி நடிகர் ரஞ்சித் கூறியதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ரஞ்சித் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா இருந்த போது அவருடைய புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டனர்.

    சசிகலா கைதானவுடன் உடனடியாக டிடிவி தினகரனின் புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். இரவோடு இரவாக 1 கோடி போட்டோக்கள் ரெடியாகிவிட்டது. அதிமுக இரண்டாக பிரிந்த போது இரு தரப்பினரும் போஸ்டரை கிழிப்பது பேனரை கிழிப்பது என இருந்தனர்.

    ஈரம் கூட காயவில்லை

    ஈரம் கூட காயவில்லை

    நான் அப்போதெல்லாம் அதிமுகவின் நலவிரும்பி. ஏன் என்றால் எனக்கு எம்ஜிஆர் பெயர் வைத்த காரணத்தால் அங்கு நடக்கும் விஷயங்களை கவனிப்பேன். சின்னம்மா இறந்து என கூறிய ரஞ்சித் உடனடியாக சுதாரித்து கொண்டு அம்மா இறந்து அந்த ஈரம் கூட காயவில்லை.

    டெஸ்ட்

    டெஸ்ட்

    ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்துக்கு வாக்கு கேட்டு முதல்வரும், அதிமுக அமைச்சர்களும் வீதிவீதியாக சுற்றினர். பின்னர் அந்த தேர்தல் ரத்தானது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது நான் நினைத்தேன். இந்த அதிமுக, திமுக எல்லாம் நல்ல பணம் சேர்த்து வைத்து விட்டார்கள். எனவே இந்த தேர்தலில் அமமுகவின் பலத்தை கண்டறிய யாரையாவது நிற்க வைத்து டெஸ்ட் செய்வார்கள் என நினைத்தேன்.

    நைட்டி அணிந்த பெண்ணுடன் உல்லாசமாக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு.. பெரும் சிக்கலில் அமமுகநைட்டி அணிந்த பெண்ணுடன் உல்லாசமாக பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு.. பெரும் சிக்கலில் அமமுக

    தினகரன்

    தினகரன்

    அப்போது தானே நிற்கிறேன் என டிடிவி தினகரன் தைரியமாக நின்றார், வென்றார். அவரு என்ன தஞ்சாவூரிலா, இல்லை மன்னார்குடியிலா நிற்கிறார். சென்னையில் போட்டியிட்டார். எவ்வளவு பெரிய விஷயம். கருத்து கணிப்பெல்லாம் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெறும் என்றார்கள். ஆனால் வழக்கம் போல் கருத்து கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு தினகரன் வெற்றி பெற்றார்.

    மக்கள் பணம்

    மக்கள் பணம்

    இது அவர்கள் செய்த துரோகத்துக்கு பதிலாகும். மக்களும் பணத்தை பெற்றுக் கொண்டாலும் நல்லவருக்கே வாக்களித்தனர். இது அம்மா ஆட்சியல்ல. சும்மா ஆட்சி. கூட்டணிக்காக எடப்பாடியை சந்தித்த ராமதாஸும்,அன்புமணியும் கஜா புயலின் போது ஒருமுறையாவது எடப்பாடியை சந்தித்தார்களா?

    கூட்டணி

    கூட்டணி

    நாட்டு பிரச்சினைக்காக என்றாவது இவர்கள் ஒரு அரசியல்வாதியை சென்று சந்தித்துள்ளனரா. அதிமுக அமைத்துள்ளது நாட்டு மக்களுக்கான கூட்டணி இல்லை. நோட்டுக்கான கூட்டணி. ஜெயலலிதா விரும்பாதவர்களை எல்லாம் கட்சிக்குள் அழைத்து வந்து கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவை விட தைரியமானவர் டிடிவி தினகரன் என்றார் ரஞ்சித்.

    English summary
    Actor Ranjith mistakenly says that Sasikala is nomore instead of saying Jayalalitha is nomore in election campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X